Actor Jayam Ravi Say Good News
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் 2003-ஆம் ஆண்டு முதல் முதலில் வெளியான திரைப்படம் ஜெயம். இந்த படத்தை இவருடைய அண்ணன் மோகன் ராஜா தான் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் இவரை ஜெயம் ரவி என்று அழைக்க தொடங்கினர்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, ஜெயம் ரவி என்ற பெயரிலேயே இவர் அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தன்னுடைய பெயரை 'ரவி மோகன்' என மாற்றிக் கொண்டுள்ளார். இது குறித்த அறிக்கை ஒன்றையும் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.
Jayam Ravi Changed Ravi Mohan
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, அன்பான ரசிகர்கள், செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் "அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்த தருணத்தில், உங்களிடம் என் வாழ்க்கையின் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலத்திலும் தற்போதும் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது. இதுவே நான் இன்று இந்த நிலையில் இருக்க அடித்தளமாக அமைந்துள்ளது. சினிமா பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, இந்த நேரத்தில் தாங்களும் சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள் அன்பு ஆதரவு அனைத்திற்கும், கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன்.
டாப் ஹீரோவுக்கு ஜோடி; ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிய சாய்பல்லவி! இது தான் காரணமா?
Jayam Ravi Name Changed
இந்த நாள் தொடங்கி நான் ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும். என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்கும்மாறும்... ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Jayam Ravi Statement
திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக, ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி உள்ளேன். இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலக அளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டுவர உதவும்.
6 மணி நேரம் லேட்; அதிகார திமிரால் ரசிகர்களை கால்கடுக்க காக்க வைத்த நயன்தாரா!
Jayam Ravi Turn to Producer
என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும் ஊக்கமளித்து வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய, என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக மாற்றப்படுகிறது. இது நான் பெற்ற அன்பையும், ஆதரவையும், மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றும் எனது இதயபூர்வமான முயற்சி.
Actor Jayam Ravi Started Foundation
தமிழ் மக்கள் ஆசியுடன் என் ரசிகர்கள் ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று என்னை அழைக்குமாறு புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஊக்கம் தான் எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திலும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நேர்மறை மற்றும் முன்னேற்றம் நிரம்பிய ஆண்டாக இதனை மாற்றுவோம் என ஜெயம் ரவி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் ஏன் கிட்ட வெச்சிக்காத; சவுண்டு கிட்ட சண்டைக்கு போய் கண்ணீர் விட்ட சுனிதா!