ஏன் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவால் சினிமாவில் பிரகாசிக்க முடியவில்லை? காரணம் தெரியுமா?

Published : Jan 13, 2025, 06:19 PM IST

Reason Behind Comedy Actor Nagesh Son Anand Babu Could not Shine in Tamil Cinema : நடிகர் நாகேஷ் அளவிற்கு ஏன் அவரது மகன் ஆனந்த் பாபுவால் சினிமாவில் சாதிக்க முடியவில்லை என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
15
ஏன் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவால் சினிமாவில் பிரகாசிக்க முடியவில்லை? காரணம் தெரியுமா?
Tamil Cinema, Asianet News Tamil

Reason Behind Nagesh Son Anand Babu Could not Shine in Tamil Cinema : நடிகர் நாகேஷ் அளவிற்கு ஏன் அவரது மகன் ஆனந்த் பாபுவால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் பிஸியான நடிகராக இருந்த ஆனந்த் பாபு கடைசியாக பல்லு படாம பாத்துக்கோ படத்தில் நடித்தார். இப்போது எந்தப் படங்களிலும் அவர் நடிக்கவில்லை. ஏன் சினிமாவில் பிஸியான நடிகராக இருந்தாலும் கூட நாகேஷ் அளவிற்கு அவரால் ஹிட் கொடுக்க முடியவில்லை என்பது குறித்து பார்க்கலாம்.

25
Anand Babu Filmography, Actor Anand Babu

சென்னை லயோலா கல்லூரியில் படித்த ஆனந்த் பாபு கல்லூரியில் நடைபெற்ற டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டார். தன்னுடைய டான்ஸ் திறமையை நிரூபிக்கவே ஆனந்த் பாபு டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் அவர் வெற்றியும் பெற்று முதல் பரிசை தனது அப்பாவின் கையால் பெற்றுக் கொண்டார். ஏனென்றால் அந்த நிகழ்ச்சிக்கு நாகேஷ் தான் சிறப்பு விருந்தினர்.

35
Comedy Actor Nagesh Son Anand Babu

இயக்குநர் டி ராஜேந்தர் இயக்கத்தில் வந்த தங்கைக்கோர் கீதம் என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஆனந்த் பாபு. இந்தப் படத்தில் ஆனந்த் பாபுவின் டான்ஸ் பெரியளவில் பேசப்பட்டது. 1983 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் கால் பதித்து வந்த ஆனந்த் பாபுவிற்கு ஒரு சில படங்கள் மட்டுமே ஹிட் கொடுத்தன. அதில் பாடும் வானம்பாடி படமும் ஒன்று. இந்தப் படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பு பெற்றார்.

45
Comedy Actor Nagesh, Tamil Cinema

ஆனந்த் பாபு சினிமாவில் அறிமுகமான 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் அர்ஜூன், விஜய், கார்த்திக், பிரசாந்த், முரளி என்று ஏராளமான ஹீரோக்கள் உதயமானார்கள். இதனால் ஆனந்த் பாபுவிற்கு தனது வெற்றியை தக்கவைத்துக் கொள்வது என்பது கடினமாக இருந்தது. இவ்வளவு ஏன் அவர் நாகேஷின் மகனாக இருந்ததால் தான் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் 20க்கும் அதிகமான படங்களில் முன் பதிவு செய்யப்பட்டார். அதோடு, அவருடன் இணைந்து நடிகை ஜீவிதா 8 படங்களில் நடித்தார்.

55
Anand Babu, Anand Babu Tamil Movies

இதனால் இருவரும் காதலிப்பதாக பேச்சு அடிபட்டது. எனினும் அவர் பல படங்களில் நடிப்பதற்குப் பதிலாக முன்பதிவு செய்யப்பட்டு அட்வான்ஸ் பெற்றுக் கொள்வதிலேயே அவரது கவனம் முழுவதும் இருந்தது. அதோடு கதையை தேர்வு செய்வதில் தோல்வியை தழுவினார். இதனால் அவர் அடுத்தடுத்த படங்களில் தோல்வி அடைந்து சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்படும் நிலை உருவானது. மேலும், குடிப்பழக்கத்திற்கும் தன்னை அடிமைப்படுத்திக் கொண்டார். இதனால் அவரால் சரியாக நடிக்க கூட முடியவில்லை. மேலும் உரிய நேரத்திற்குள் ஷூட்டிங்கிற்கும் அவரால் வரமுடியாமல் போனது. இது போன்ற பல காரணங்களால் அவரால் சினிமாவில் காலுன்ற முடியாமல் போனது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories