முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

First Published | Jan 14, 2025, 3:34 PM IST

Sivakarthikeyan shared a Family Photo On Pongal Festival : பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan Pongal Wishes, Sivakarthikeyan Son

Sivakarthikeyan shared a Family Photo On Pongal Festival : தமிழ் சினிமாவில் இப்போது ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள சிவகார்த்திகேயன் முதல் முறையாக ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்த மாஸ் ஹீரோவானார். சினிமாவில் அறிமுகமானது முதல் காமெடி ஹீரோவாக வலம் வந்த சிவகார்த்திகேயனின் எந்தப் படமும் ரூ.150 கோடிக்கு அதிகமாக வசூல் குவிக்கவில்லை. ஒரு சாதாரண நடிகராக 10 ஹீரோக்களில் ஒருவராக பல படங்களில் நடித்து வந்தார்.

Sivakarthikeyan Pongal Wishes, Sivakarthikeyan Son

இந்த நிலையில் பிக் பாஸ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்தார். மறந்த தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்திருந்தார். இதே போன்று சாய் பல்லவி இந்து ரெபேகா வர்கீஸ் ரோலில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்தது.

Tap to resize

Sivakarthikeyan, Amaran Box Office Collection, Sivakarthikeyan Family Photos

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ப்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் சிவகார்த்திகேயனை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. எப்படி ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு பிறகு அஜித், விஜய் இருக்கிறார்களோ அவர்களைத் தொடர்ந்து தனுஷ், விக்ரம் வரிசையில் இப்போது சிவகார்த்திகேயன் உயர்ந்துவிட்டார்.

Sivakarthikeyan Son, Amaran, Sivakarthikeyan Upcoming Movies

அமரன் 100 நாட்கள் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிய நிலையில் வெற்றி விழா கொண்டாடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25ஆவது படத்தில் ரவி மோகன், அதர்வா ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan Pongal Wishes

இந்த நிலையில் தான் பொங்கல் திருநாளான இன்று தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ பொங்கல்!! அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் 3ஆவதாக பிறந்த மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில் இப்போது முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதே போன்று அத்ரவா தனது புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், வணங்கான் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அருண் விஜய் குடும்பத்தோடு பொங்கல் வைத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Latest Videos

click me!