மூதேவி.. கையில விலங்கு போட்டு கூட்டி வரணும்ங்க அவனை..! விஜயை ஒருமையில் பேசும் நக்கீரன் கோபால்!

Published : Oct 03, 2025, 06:36 PM IST

Nakkheeran Gopal: கரூரில் நடந்த சம்பவம் குறித்தும், விஜயின் பேச்சை விமர்சிக்கும் விதமாகவும் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், அண்மையில் கொடுத்த பேட்டியில் விஜய் பற்றி ஒருமையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
16
கரூர் பிரச்சாரத்தில் நடந்த அசம்பாவிதம்:

கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, தவெக தலைவர் விஜய் கரூர் பகுதியில் நடத்திய பிரச்சார கூட்டத்தில், சரியான நேரத்திற்கு விஜய் வர தவறியதன் காரணமாகவே, நெருக்கடியில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்காதது, தவெக கட்சியின் அலட்சிய போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இந்த எதிர்பாராத சம்பவத்துக்கு காரணமாக கூறப்படுகின்றன.

TRP கிங் ஆக மாறிய சன் டிவி... புஸ்ஸுனு போன விஜய் டிவி..! இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ

26
விஜய்க்கு தூண்டில் போடும் கட்சிகள்:

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விஜய்க்கு ஒரு தரப்பு ஆதரவாகவும், மற்றொரு தரப்பு எதிராகவும் மாறியுள்ளது. குறிப்பாக அதிமுக - பாஜக ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. எனவே விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலுக்கான தன்னுடைய கூட்டணியை அதிமுக மற்றும் பாஜகவுடன் அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்றும், இதற்க்கு தூண்டில் போடும் விதத்தில்... இப்போதே டெல்லி தலைமை விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்த துவங்கிவிட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. மேலும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைத்தளம் மூலம் குரல் கொடுக்க துவங்கி உள்ளனர்.

36
திருமா - சீமான் எதிர்ப்பு:

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், விசிக கட்சி தலைவர் திருமா மற்றும் நாதக கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளனர். இருவருமே ஏன் விஜய்யை கைது செய்யவில்லை என்றும், இந்த 41 பேர் இறந்ததற்கு முக்கிய காரணம் விஜய் தான் என்பது போல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

காந்தாரா சாப்டர் 1 படம் பார்க்க வந்த பெண்... தியேட்டரில் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு..!

46
நக்கீரன் கோபால் ஆவேசம்:

இவர்களை தொடர்ந்து, பிரபல ஸ்டார் பத்திரிகையாளராக பார்க்கப்படும் நக்கீரன் கோபால், விஜயை ஒருமையில் பேசி, பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது..." விஜய் கையில் விலங்கு போட்டு கூட்டிட்டு போகணும். அவன் 41 கொலை பண்ணி இருக்கான். அதே போல் நான் திமுக காரன் இல்லை. ஆனால் முப்பெரும் விழா பற்றி விஜய் அப்படி பேசியது சரி அல்ல. 1.5 லட்சம் சேர் போட்டு, அதில் பிஸ்கட், ஸ்னாக்ஸ், தண்ணீர் பாட்டில், எல்லாம் வெச்சு அனைவரையும் மரியாதையோடு நடத்தினார்கள் அந்த விழாவில். அதை விஜய் 30 பேரை வைத்து விழாவா என கிண்டல் செய்வது போல் பேசியது கண்டிக்கத்தக்கது. இதை பேச அவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கனும்.

56
காப்பாற்றியதே போலீஸ் தான்:

விஜய் கூட்டத்துக்கு வந்ததுமே காவல்துறைக்கு தன்னுடைய நன்றியை கூறினான். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்துக்கு நடுவே அவனை காப்பாற்றி கொண்டுவந்ததே அந்த போலீஸ் தான் என்பதை நீயே சொல்ற மூதேவி. அப்பறம் ஏன்? "இந்த சம்பவத்துக்கு போலீசும் கூட உடந்தையா இருக்கலாம் அப்படினு சொல்ற. இதை என்னால் ஜீரணிக்கவே முடியல.

66
தமிழ்நாட்டுக்கே விஷம் விஜய்:

விஜய்க்கு சீனியர் தானே ரஜினி - கமல் ஆனால் அவனை யாரவது மதிச்சு பேசி பார்துருகீங்களா? காரணம் அவன் யாரையுமே மதிக்கல. அவனை எல்லாம் கையில் விலங்கு போட்டு கூட்டிட்டு வரணும். அவன் 41 கொலை பண்ணி இருக்கான். விஜய் கண் முன்பே சிலரை அந்த கூட்டத்தில் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அது அவனுக்காக வந்த கூட்டணும். ஆனால் அவனுக்கு எந்த ஒரு பதட்டமும் இல்லை. என்ன நடக்குதுன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல. கல்நெஞ்சனை விட கொடூரம் அவன் பண்ணியது. விஜய் இந்த தமிழ்நாட்டுக்கே விஷம் போன்றவர் என நக்கீரன் கோபால் பேசியுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories