அதன் பிறகு எல்லோரும் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்ப, எல்லோரும் வேனில் இருக்கின்றனர். பாக்கியம், பரணி, முத்துப்பாண்டி ஆகியோரும் இதே வேனில் ஏற சௌந்தரபாண்டி பதறுகிறார். பாண்டியம்மாவையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்கின்றனர். சௌந்தரபாண்டி தனது குடும்பத்தாரை காப்பாற்ற பின்னாடியே வேனை பின் தொடர்ந்து செல்கிறார். பாண்டியம்மா பயத்தில் வேனில் பாம் இருப்பதாக சொல்ல சண்முகம் குடும்பத்தினர் அதை நம்ப மறுக்கின்றனர்.
ஒரு வழியாக வீடு வந்து இறங்க ஆரத்தி எடுத்து அறிவழகன் ரத்னாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்கின்றனர். பாண்டியம்மா பயத்தில் நடுங்கியபடி சௌந்தரபாண்டி அருகே செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.