ரஜினிகாந்துக்கு 10 நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாட்டு! எது தெரியுமா?

Published : Feb 11, 2025, 02:46 PM IST

கானா இசை மூலம், தமிழ் சினிமாவில் தனக்கான ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட இசையமைப்பாளர் தான் 'தேவா' இவர் பத்தே நிமிடத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு போட்ட ஹிட் பாடல் பற்றிய உங்களுக்கு தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம்.  

PREV
17
ரஜினிகாந்துக்கு 10 நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாட்டு! எது தெரியுமா?
400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்

தமிழ் சினிமாவில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர் தேவா. இவருடைய பெயர் தேவநேசன் சொக்கலிங்கம் என்றாலும், சினிமாவுக்கு வந்த பின்னர் பெயரை சுருக்கி தேவா என மாற்றிக்கொண்டார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தேவா தூர்தர்ஷன் பொதிகை சேனலில், வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்கு பாடல் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார். சில இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய சகோதரருடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

27
தேவா அறிமுகமான திரைப்படம்

பின்னர் தமிழில், 1986 ஆம் ஆண்டு வெளியான 'மாட்டுக்கார மன்னாரு' என்கிற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து மனசுக்கு ஏத்த மகராச,  வைகை பொறந்தாச்சு, நம்ம ஊரு பூவாத்தா, என அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்க தொடங்கினர். வைகை பொறந்தாச்சு திரைப்படத்தில் இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் ஸ்டேட் பிலிம் விருதையும் தேவா வென்றார்.

ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ட்விஸ்ட்? குழந்தை உயிரை பரணி - ஷண்முகம் காப்பாற்ற போவது எப்படி? அண்ணா சீரியல் அப்டேட்!

37
முன்னணி இசையமைப்பாளராக இருந்த தேவா

1992-ல் சுமார் 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த தேவா, பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார். 15 ஆண்டுகளுக்கு மேல் யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்த தேவா, 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னரே... தான் இசையமைக்கும் திரைப்படங்களை குறைத்துக் கொண்டு, இளம் இசையமைப்பாளர்களுக்கு வழி விட்டார். உடல்நல பிரச்சனை காரணமாக பல வாய்ப்புகளை இவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இவரை தொடர்ந்து இவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

47
பாடகராகவும் பிரபலமான தேவா

கடைசியாக தேவா 2023 ஆம் ஆண்டு சில படங்களுக்கு இசையமைத்த நிலையில், அந்த படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தமிழ் மட்டும் இன்றி, கன்னடா, தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதேபோல் சுமார் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். கடந்த ஆண்டு வெளியான லால் சலாம் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் கூட இவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரேவதியை பெண் கேட்டு வரும் பரமேஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

57
இசையமைப்பாளர் தேவா

இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்த போதும் அதில் இருந்து ஒதுங்கியே இருந்த தேவா, சில படங்களில் தேவாவாகவே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தன்னுடைய பாடல்கள் மூலம் இளம் ரசிகர்களை உச்சாக படுத்த கூடிய தேவா, பத்து நிமிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டியூன் போட்டு உருவாக்கிய பாடல் குறித்து உங்களுக்கு தெரியுமா?

67
அண்ணாமலை திரைப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் அண்ணாமலை. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த நிலையில், கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம், பாலச்சந்தர் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, சரத் பாபு, மனோரம்மா, ராதாரவி, ரேகா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கேம் சேஞ்சரின் படுதோல்வி; தயாரிப்பாளர் தில் ராஜு முடிவால் டாப் ஹீரோக்களுக்கு ஆப்பு!

77
10 நிமிடத்தில் உருவான பாடல்

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தான் தேவா பத்தே நிமிடத்தில் டியூன் போட்டு கொம்போஸ் செய்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தேவா கூறுகையில் ... "பாலச்சந்தர் சார் எனக்கு போன் பண்ணி, தேவா நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. நாளைக்கு எனக்கு ஒரு பாட்டு வேணும். ரஜினி - குஷ்பூ கால்ஷீட் கொடுத்திருக்காங்க. மூணு மணிக்கு ரெக்கார்டிங் அப்படின்னு சொல்லிட்டாராம். அடுத்த நாள் காலையில 7:00 மணிக்கு ஆரம்பிச்சேன் 7:10-க்கு பாடலை கம்போஸ் பண்ணி முடிச்சிட்டாராம். பாட்டு செம ஹிட். அந்த பாட்டு தான் ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் என்கிற பாடல் என்று தெரிவித்துள்ளார். இந்த பாட்டு அப்போது மட்டும் அல்ல, இப்போதும் அதிகப்படியான ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்படும் ஒரு பாடலாகவே உள்ளது.

click me!

Recommended Stories