பிரதீப்பை கோடீஸ்வரன் ஆக்கிய கோமாளி; அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : Feb 11, 2025, 02:03 PM IST

லவ் டுடே மற்றும் டிராகன் படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமான பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
பிரதீப்பை கோடீஸ்வரன் ஆக்கிய கோமாளி; அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்

குறும்படங்களை இயக்கியதன் மூலம் சினிமா வாய்ப்பை தட்டி தூக்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பல வருடங்களாக கோமாவில் இருந்த ஒருவர் அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்தால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மிகவும் சூப்பரான திரைக்கதை உடன் கொடுத்திருந்தார் பிரதீப். இதனால் இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

25
பிரதீப்புக்கு திருப்புமுனை தந்த கோமாளி

கோமாளி படத்தின் வெற்றிக்கு பின்னர் லவ் டுடே படத்தை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி இதன் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். சுமார் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பட்டிதொட்டியெங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.  லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் பிசியான ஹீரோவாக உருவெடுத்துவிட்டார் பிரதீப்.

இதையும் படியுங்கள்... உன்ன லவ்வரா தான் பாக்க முடியும்; லைப் பாட்னரா இல்ல - பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' ட்ரைலர் வெளியானது!

35
லவ் டுடே நாயகன் பிரதீப்

லவ் டுடே படத்துக்காக பிரதீப்புக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின் தன் சம்பளத்தை மளமளவென உயர்த்திய பிரதீப் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டிராகன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்கும் அவர் ரூ.5 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களின் ரிலீசுக்கு முன்பே அதன் உரிமம் பல கோடிக்கு விற்பனை ஆகி, லாபத்தை குவித்துள்ளதால், அடுத்து நடிக்க உள்ள படங்களுக்கு ரூ.18 கோடி சம்பளம் வாங்குகிறாராம் பிரதீப்.

45
பிரதீப் ரங்கநாதன் சொத்து மதிப்பு

கோமாளி படத்திற்கு முன்பு வரை மிடில் கிளாஸ் பையனாக இருந்த பிரதீப் ரங்கநாதனை, கோமாளி திரைப்படத்தின் வெற்றி கோடீஸ்வரன் ஆக்கியது. அப்படத்திற்கு பின்னர் தான் கோடிகளில் சம்பளம் வாங்கத் தொடங்கினார் பிரதீப். சினிமாவில் குறுகிய காலத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ள பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.20 கோடிக்கு மேல் இருக்குமாம்.

55
பிரதீப் ரங்கநாதன் கைவசம் உள்ள படங்கள்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது டிராகன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. அதேபோல் அவர் கைவசம் உள்ள மற்றொரு படமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories