நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனாலும், படம் அட்டர் பிளாப் ஆனது. 3 படத்தின் தோல்விக்கு பின்னர் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கெளதம் கார்த்திக் நடித்த இப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடித்தார். இப்படமும் தோல்வியை சந்தித்தது.
24
ரஜினி மகள் ஐஸ்வர்யா
அடுத்தடுத்து 2 படங்களின் தோல்விக்கு பின்னர் சினிமாவை விட்டு சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த ஆண்டு லால் சலாம் என்கிற படம் மூலம் மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் அவரது தந்தை ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இருப்பினும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தின் தோல்விக்கு பின்னர், படத்தின் காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் தொலைந்து போனதே அதன் தோல்விக்கு காரணம் என கூறி இருந்தார் ஐஸ்வர்யா.
இதையடுத்து சித்தார்த்தை ஹீரோவாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்படம் அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதுமுகங்கள் நடிக்கும் ஒரு சிறு பட்ஜெட் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளாராம். அப்படத்தை இயக்குவது மட்டுமின்றி அதை புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் தயாரிக்கவும் உள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
44
தயாரிப்பாளராகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளது ஏன் என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. ஒருவேளை தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்ததால் ஐஸ்வர்யாவின் படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்னுக்கு வரவில்லையோ என கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள், அதனால் தான் தானே தயாரிப்பாளராக மாறி இருப்பதாக கூறி வருகின்றனர். அவரது தந்தை மற்றும் சகோதரி செளந்தர்யா, தயாரிப்பாளராக தோல்வி அடைந்துள்ள நிலையில், ஐஸ்வர்யா ஒரு தயாரிப்பாளராக வெற்றி வாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.