ஒவ்வொரு நாளும் யூகிக்க முடியாத கதைக்களத்துடன், சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் TRP-யில் முன்னணி இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியல், திங்கள் முதல் சனி வரை தினம் தோறும் ரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய தினம், கார்த்தி ராஜராஜனிடம் மாயா மற்றும் மகேஷ் இடையே நல்ல உறவுமுறை இல்லை என கூறிய நிலையில் இன்று என்ன நடக்க உள்ளது என்பதை பார்ப்போம்.
25
மாயா பற்றிய உண்மையை உடைத்த கார்த்தி:
கார்த்தி, மாயா மற்றும் மகேஷ் பற்றி கூறிய தகவலை கேட்டு, ராஜராஜன் அதிர்ச்சி அடைகிறார். எனவே இந்த கல்யாணத்தை எப்படியும் நிறுத்த வேண்டும் என கார்த்திக் கூறும் நிலையில்... கார்த்திக்கு எதிராக மாயா மற்றும் மகேஷ் இருவரும், மீண்டும் ஏதாவது சதி திட்டம் தீட்டுவது பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள்.
பஞ்சாயத்தில் எப்படியோ நல்லவன் என அந்த கார்த்தி நிரூபிச்சு மீண்டும் வீட்டுக்குள்ள வந்துட்டான். ஏதாவது செஞ்சு அவனை இந்த ஊரை விட்டு துரத்தணும் என்றும், அவனுக்கு ரேவதி மட்டும் கிடைச்சிடவே கூடாது என்றும் பேசி கொண்டிருக்கிறார்கள்.
45
மயில்வாகனம் கொடுத்த ஐடியா
இங்கே மயில் வாகனம், ராஜராஜனை தனியாக கூட்டி சென்று, ரேவதியோட வாழ்க்கையை காப்பாத்த ஒரே வழி தான் இருக்கு. இப்படி செஞ்சா மட்டும் தான் ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரும் என கூற, ராஜராஜன் ஆர்வமாக என்ன விஷயம் என்று கேட்கிறார். பேசாம பாட்டியை வீட்டிற்கு வரவெச்சு, ரேவதியை பொண்ணு கேட்க சொல்லுங்க என கூறுகிறார். ரேவதிக்கும் - கார்த்திக்கும் நாம திருமணம் செஞ்சு வச்சிட்டா இந்த இரண்டு குடும்பமும் சுலபமா ஒன்னு சேர்த்துடப்போகுது என ஐடியா கொடுக்கிறார்.
ராஜராஜனுக்கு இது தான் சரியாக இருக்கும் என மனதில் பட்டதால், அம்மா பரமேஸ்வரிக்கு போனை போட்டு ரேவதியை பெண் கேட்டு வீட்டுக்கு வரும் படி அழைக்கிறார். பாட்டி பரமேஸ்வரி ரேவதியை பெண் கேட்டு வீட்டுல நுழைய, சாமுண்டீஸ்வரி உங்களை யார் வீட்டுக்குள்ள விட்டது? என கத்துகிறார்.
சாமுண்டீஸ்வரியை வெளியே போங்க என அசிங்கப்படுத்துவது போல் சொல்கிறார். இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய தொடர்ந்து கார்த்திருப்போம்.