கார்த்தியால் ராஜராஜன் எடுத்த முடிவு; மாயாவுக்கு செக்மேட் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Published : Feb 08, 2025, 03:05 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல ரசிகர்களின் ஃபேவரட் தொடரான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய (பிப்ரவரி 8-ஆம்) தேதி எபிசோட் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.  

PREV
15
கார்த்தியால் ராஜராஜன் எடுத்த முடிவு; மாயாவுக்கு செக்மேட் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்க போவது

எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில சீரியல்களின் 2-ஆம் பாகத்தை மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்க நினைக்கிறார்கள். அப்படி பல ரசிகர்களின் எதிர்பார்ப்போடு, கடந்த ஆண்டு துவங்கியது 'கார்த்திகை தீபம்' சீரியலின் இரண்டாவது பாகம். இந்த சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

25
கார்த்தியின் வெளியேற்றத்தால் சந்தோஷத்தில் மாயா

நேற்றைய தினம், கார்த்தி தான் தன்னுடைய தங்கை அபிராமியின் மகன் என்பது, ராஜராஜனுக்கு தெரிய வந்த நிலையில், "இன்றைய தினம் எப்படியும் அந்த ட்ரைவரை ராஜராஜன் மூலமாக, மகேஷும், மாயாவும் திட்டம் போட்டு வெளியே அனுப்பியதை நினைத்து மனதுக்குள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள். 

பொண்டாட்டி இருக்கும் போதே 40 வயது நடிகைக்கு வீடு; வெளிப்படையா கூத்தடிக்கும் நடிகர்!
 

35
ஆனந்த கண்ணீர் விடும் ராஜராஜன்

ஆனால் அவர்களின் சந்தோஷத்துக்கு செக்மேட் வைப்பது போல், ராஜராஜன் கார்த்தி பற்றிய உண்மை தெரிய வந்ததால், அவரை சந்தித்து பேசுகிறார். தன்னுடைய தங்கச்சி மகனை பார்த்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விடுகிறார். பின்னர் கார்த்தியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதை நினைத்து வருத்தப்படுவது மட்டும் இன்றி கார்த்தியிடம் மனசார மன்னிப்பும் கேட்கிறார்.
 

45
25 வருடம் கழித்து அம்மாவை சந்தித்த ராஜராஜன்:

பின்னர் கார்த்தி, தன்னுடைய மாமன் ராஜராஜனை பாட்டி பரமேஸ்வரியை சந்திக்க வைக்கிறார். சுமார் 25 வருடத்திற்கு பின் பெத்த பிள்ளையை பார்க்கும் பரமேஸ்வரி பாட்டி , சாவதற்கு முன்பு உன்னை பார்த்து விட்டேன் என உணர்ச்சி பூர்வமாக பேசுகிறார். ராஜ ராஜன் தன்னுடைய அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, இருவரும் தாய் - பிள்ளை அன்பில் நெகிழ்ந்து போகிறார்கள். 

47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி; சங்கீதாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு - போட்டோஸ்!

55
ராஜராஜனை சமாதானம் செய்த கார்த்தி:

ராஜராஜன், கார்த்தியை பார்த்து, நீ அந்த ஊரை விட்டு போக நான் தான் காரணம். நான் பஞ்சாயத்துல பொய் சொன்னதால தான், நீ ஊரை விட்டு வெளியேறும் நிலை உருவானது. நீ என்கூட வா நான் உண்மையை சொல்கிறேன் என கார்த்தியை அழைக்க, அதை வேண்டாம் என தவிர்த்து பெருந்தன்மையோடு பேசுகிறார் கார்த்தி. நான் ஊருக்குள் வர வேற வழி இருக்கு மாமா என சொல்லி ராஜராஜனை சமாதான படுத்துகிறார். எனவே அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories