நியூ என்ட்ரி கொடுக்கும் 3 பிரபலங்கள் - எதிர்பாராத திருப்பங்களுடன் 'அண்ணா' சீரியல் எபிசோட்!

Published : Feb 08, 2025, 05:08 PM IST

கிராமத்து கதைக்களத்தில் அண்ணன் - தங்கைகள் பாசத்தை எடுத்து காட்டும் விதமாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில், இன்று 3 பிரபலங்கள் அதிரடியாக என்ட்ரி கொடுக்க உள்ளனர்.  

PREV
15
நியூ என்ட்ரி கொடுக்கும் 3 பிரபலங்கள் -  எதிர்பாராத திருப்பங்களுடன் 'அண்ணா' சீரியல் எபிசோட்!
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடு

சீரியல்களில் எப்போதுமே அண்ணன் - தங்கை பாசத்தில் உருவாகும் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் 'அண்ணா சீரியல்' துவங்கிய முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. நேற்றைய தினம் சௌந்தரபாண்டியை வரவழைத்து, பெண் வீட்டார் சிவபாலனை வீட்டோட மாப்பிள்ளையாக கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பதை பார்ப்போம்.
 

25
கோபத்தில் சௌந்தரபாண்டி:

பெண் வீட்டார் யாரும் எதிர்பாராத விதமாக, சிவபாலனை வீட்டோடு மாப்பிள்ளையாக கேட்க, அவர் நான் அப்படியே வீட்டோட மாப்பிள்ளையா போயிடுறேன். நீங்க மட்டும் சந்தோஷமா இருங்க என சொல்கிறார். இதனால் கடுப்பான சௌந்தரபாண்டி, இனிவே யாராவது வீட்டோட மாப்பிள்ளையாக கேட்டு வந்தா அப்பறம் நடக்குறதே வேற என கோபத்தில் கத்துகிறார்.

சர்ச்சையை ஏற்படுத்திய 'பேட் கேர்ள்' படத்திற்கு NETPAC சர்வதேச விருது!

35
மூன்று பிரபலங்களின் அறிமுகம்:

இதை தொடர்ந்து இன்றைய தினம், 3 புதிய பிரபலங்களின் அறிமுகம் அண்ணா சீரியலில் காட்டப்படுகிறது. திருச்செந்தூர் சொந்த ஊராக இருந்தாலும், அமெரிக்காவில் செட்டில் ஆன குடும்பம் ஒன்று, கோவிலுக்கு பரிகாரம் மற்றும் பூஜைகள் செய்ய வருகிறார்கள்.

45
பரணியின் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் குழந்தை :

தங்களின் குழந்தையை ட்ரைவரை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு, குளத்தில் தலை மூழ்க செல்கிறார்கள். ட்ரைவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த குழந்தைக்கு பிக்ஸ் வருகிறது. இதனால் பதறி போன ட்ரைவர், குழந்தையின் பெற்றோரை குளத்தின் அருகில் தேட, அவர்கள் அங்கு இல்லாததால், குழந்தையை அருகே இருக்கும் பரணியின் மருத்துவமனை கிளீனிக்குக்கு அழைத்து செல்கிறார்.

சீரியலில் மாமியாராக நடித்த நடிகையையே காதலித்து திருமணம் செய்த நடிகர்!

55
நினைத்தேன் வந்தாய் அஞ்சலி:

குழந்தைக்கு சிகிச்சை கொடுத்த பரணி, குழந்தையை உடனே மதுரையில் இருக்கும் பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகணும் என சொல்கிறார். குழந்தையை தூக்கி கொண்டு மதுரைக்கு கிளம்ப போகும் நிலையில், அடுத்த என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

மேலும் அமெரிக்காவில் இருந்து, திருச்செந்தூர் வரும் பிரபலன்களாக, நடிகை  ஸ்ரீநிதி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஜமீலா சீரியலில் நாயகனாக அஜய்யும், குழந்தையாக நினைத்தேன் வந்தாய் அஞ்சலி பாப்பாவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories