ஒரே பாட்டு; உலக அளவில் கவனம் ஈர்த்த செய்திகளை கோர்த்து வரிகளாக்கிய வாலி!

First Published | Dec 3, 2024, 7:13 PM IST

Lyricist Vaali : தமிழ் திரையுலகை பொறுத்தவரை வித்யாசமான பல படைகளை எழுதி அசத்தியவர் தான் காலம்சென்ற வாலிப கவிஞர் வாலி.

Vaali

தமிழ் மொழியைப் பொறுத்தவரை 15,000 மேற்பட்ட திரையிசை பாடல்களை எழுதி மாபெரும் சாதனை படைத்தவர் தான் வாலிபக் கவிஞர் வாலி. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறை நடிகர்களுக்கு இவர் பல பாடல்களை எழுதி இருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்கள் புகழின் உச்சிக்கு செல்ல காரணமாக இருந்தது இவருடைய வரிகள் என்றால் அது சற்றும் மிகையல்ல. கடந்த 1931 ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் வாலி தனது 81ஆவது வயதில் கடந்த 2013 ஆம் ஆண்டு காலமானார்.

10 லட்சம் சம்பள பாக்கி; ஆனால் அதில் பைசா வாங்காமல் நடித்துக்கொடுத்த ரஜினி - ஏன் தெரியுமா?

Lyricist Vaali

தமிழ் திரையுலகை பொருத்தவரை எம்.எஸ் விஸ்வநாதன் தொடங்கி இன்று அனிருத் வரை பல இசை கலைஞர்களோடு அவர் பயணித்திருக்கிறார். குறிப்பாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பல பாடல்களை எழுதி இருக்கிறார் வாலி. அவை அனைத்துமே பெரிய அளவில் ஹிட்டான பாடல்கள். தமிழ் மொழி மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் பெரும் புலமை கொண்டிருந்த வாலி ரஹ்மானிசையில் வெளியான "காதலன்" என்கின்ற திரைப்படத்தில் "முக்காலா முக்காபுலா" என்கின்ற பாடலை எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


AR Rahman

அந்த வகையில் ஏ.ஆர் ரகுமான் இசையில் கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபு தேவா, ஷில்பா ஷெட்டி மற்றும் மதுபாலா உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் "மிஸ்டர் ரோமியோ". இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. கே.எஸ் ரவி என்பவர் இயக்க, கிரேசி மோகன் எழுத்தில் உருவான இந்த திரைப்படத்தை பிரபல நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி சவுத்ரி தயாரித்த வழங்கியது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள், இந்த அனைத்து பாடல்களுக்கும் வரிகளை எழுதியது வாலிபக் கவிஞர் வாலி தான்.

Mr Romeo

அதிலும் குறிப்பாக "மோனோலிசா" என்கின்ற பாடலில் அந்த திரைப்படம் வெளியான 1996 ஆம் ஆண்டு உலக அளவில் கவனத்தை ஈர்த்த பல விஷயங்களை தன்னுடைய பாடலில் வைத்திருப்பார் வாலி.. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தது. அதனை இந்த மோனோலிசா பாடலில் "அட்லாண்டா ஒலிம்பிக் தான் முடிந்தால் என்ன? அன்பே நம் லவ் கேம்ஸ் முடியாதம்மா" என்று எழுதியிருப்பார். அதேபோல அந்த 1996 ஆம் ஆண்டு தான் டயானா மற்றும் சார்லஸ் இடையே விவாகரத்து ஏற்பட்டது. அதை சார்லசும் டயானாவும் பிரிந்தால் என்ன? அழகே நம் லவ் என்றும் பிரியாத அம்மா" என்று எழுதி இருப்பார். 

அதேபோல அந்த ஆண்டு அபாரமாக பல சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்த நிலையில். "காதல் கிரிக்கெட்டில் பவுலிங் நீ போடடி.. அந்த டெண்டுல்கர் போல் சிக்சர் அடிப்பேனடி" என்று எழுதி அசத்தியிருப்பார் வாலி.

திரைப்பட விமர்சனம்: தயாரிப்பாளர் சங்கம் தொடுத்த வழக்கு ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Latest Videos

click me!