Published : Dec 03, 2024, 04:51 PM ISTUpdated : Dec 03, 2024, 04:53 PM IST
எந்த ஒரு திரைப்படமும் வெளியான 3 நாட்களுக்குப் பிறகே சினிமா விமர்சனங்கள் வெளியாக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதற்க்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு கதை எந்த அளவுக்கு முக்கியமோ? அதே அளவுக்கு விமர்சனங்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மெகா பட்ஜெட் படங்கள், மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் விமர்சனங்களே இல்லாமல் ரசிகர்களை சென்றடைந்தாலும், சிறு பட்ஜெட் படங்களை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது விமர்சனங்கள் மட்டுமே. இதற்க்கு மிகப்பெரிய உதாரணம், ப்ளூ ஸ்டார், லப்பர் பந்து, லவ்வர் போன்ற படங்கள்.
25
You Tube Channels
முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் மட்டுமே திரைப்படங்களை விமர்சனம் செய்வார்கள். ஆனால் எப்போது யூடியூப் கல்ச்சர் வந்ததோ... அப்போதில் இருந்து போன் வைத்திருப்பவர்கள் அனைவருமே ஒரு விமர்சகராக மாறி விட்டனர். போதாத குறைக்கு, பேஸ்புக், ட்விட்டர், மூலம் சிலர் திரைப்படம் பார்த்து கொண்டே இருக்கும் போது தங்களின் விமர்சனங்களை கூறுகிறார்கள்.
இதுபோன்ற விமர்சனங்களால் தான், பிக் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தியன் 2, கங்குவா, போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்களை கடந்து ரசிகர்களை சென்றடையவில்லை என ஒரு தரப்பினர் கூற, மற்றொரு தரப்பினர் விமர்சனங்களை கடந்து பல படங்களை ரசிகர்கள் வெற்றிபெற வைத்துள்ளனர் என கூறுகிறார்கள்.
45
Producer Council
இந்நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின்னர் நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்... திரையரங்கு உரிமையாளர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி ஏற்கனவே திரையரங்குகளில் திரைப்படம் குறித்து கருத்து கேட்க வருபவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு படம் வெளியாகி 3 நாட்களுக்கு பின்னரே அந்த படம் குறித்த விமர்சனம் வெளியாக வேண்டும் என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதனை விசாரித்த நீதிமன்றம், "திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கலாமே தவிர, விமர்சகர்களின் விமர்சனம், கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி சவுந்தர் தெரிவித்தார்.விமர்சனத்தை முறைப்படுத்த விதிகள் வகுக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.