நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமணம் களைகட்ட துவங்கியுள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு, நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் தங்களது காதலை அறிவித்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில், நாகார்ஜுனா வீட்டில் முடிவடைந்தது. இதை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திருமண சடங்களுடன் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது.
26
Naga Chaitanya and Sobhita Dhulipala Engagement
சில தினங்களுக்கு முன்பு, சைதன்யா - சோபிதாவின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாது. அதில் சில சிறப்பு பரிசுகளுடன் இருவரும் தங்களது அழைப்பிதழை கொடுத்து வந்ததை பார்க்க முடிந்தது. கைகளால் செய்யப்பட்ட மூங்கில் கூடையில் சிற்றுண்டி பாக்கெட்டுகள், மல்லிகைப் பூக்கள், இவர்களின் பெயர் அச்சிடப்பட்ட துணி மற்றும் பல சிறிய நினைவுப் பரிசுகளும் இருந்தது.
Naga Chaitanya and Sobhita Dhulipala Wedding Place
இதுவரை காதல் ஜோடிகளாக அறியப்பட்ட நாக சைதன்யா - சோபிதா இருவரும் நாளைய தினம் கணவன் மனைவியாக மாற உள்ளனர். இவர்களின் திருமணம், நாகர்ஜூனாவின் குடும்ப முறைப்படி ஹைதராபாத்தின் பிரபலமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடக்க உள்ளது. நாக சைதன்யாவின் தாத்தாவும், பிரபல நடிகருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் இந்த திருமண மஹாலை கட்டினார். எனவே மிகவும் செண்டிமெண்ட் டச்சுடன் இந்த இடத்தை தேர்வு செய்து திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர.
46
Celebrities Attend Wedding
இது மிகவும் பிரைவேட் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் சைதன்யா - சோபிதா உறுதியாக இருந்ததால், இவர்களின் திருமணத்திற்கு 300 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பிரபலங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
டகுபதி மற்றும் மெகா குடும்பங்கள், நாக சைதன்யா திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். அதே போல் மகேஷ் பாபுவின் குடும்பம் மற்றும் அமிதாப் பச்சன், ஆமிர் கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர எஸ்.எஸ். ராஜமௌலி, மணிரத்னம், போன்ற முன்னணி இயக்குனர்கள் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
66
Naga Chaitanya and Sobhita Dhulipala Photos
நாக சைதன்யா - சோபிதா திருமண நிகழ்ச்சியை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப அணுகப்பட்டதாகவும், ஆனால் இவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களாக சோபிதா - நாக சைதன்யா திருமண சடங்குகள் நடக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.