
Why Rajinikanth Not Acted in Advertisements : சினிமாவில் நடிக்க வந்து ஹிட் கொடுத்து ஒரு நிலைக்கு வந்துவிட்டால் விளம்பரங்களில் நடிக்க தொடங்கிவிடுகிறார்கள். நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி விளம்பரங்களில் நடித்து விடுகிறார்கள். இதே போன்றுதான் கடை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள்.
ரஜினிகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாகவே கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமின்றி ரஜினிக்கு முன்னாடியே கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல் ஹாசன், மாணவன் படத்தின் மூலமாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்தப் படம் அவருக்கு சிறப்பு தோற்றத்தை கொடுத்தது.
அன்னை வேளாங்கண்ணி, குறத்தி மகன், அரங்கேற்றம், பருவ காலம், நான் அவனில்லை என்று ஆரம்பித்து விக்ரம் வரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதே போன்று தான் ரஜினிகாந்தும், சினிமாவில் அபூர்வ ராகங்களில் ஆரம்பித்து இன்று வேட்டையன் படம் வரையில் 170 படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 49 ஆண்டுகளை கடந்து விட்டார்.
இந்த 49 ஆண்டுகளில் ரஜினிகாந்த் ஒரு முறை கூட விளம்பரங்களில் நடிக்கவில்லை. கமல் ஹாசன் கூட விளம்பரங்களில் நடித்துவிட்டார். கமல் ஹாசன் மட்டுமின்றி சத்யராஜ், பிரபு, கார்த்தி, தளபதி விஜய், மாதவன், அஜித் என்று எல்லா நடிகர்களும் விளம்பரங்களில் நடித்துவிட்டனர்.
விளம்பரங்களில் நடிப்பதற்கு கூட அதிக சம்பளம் வாங்கியவர்களின் பட்டியலில் விஜய் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அவர், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரத்தில் நடிப்பதற்கு ரூ.125 கோடி வரையில் சம்பளம் வாங்கியிருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கின்றது.
படங்களில் மாதக்கணக்கில் நடிப்பதை விட விளம்பரங்களில் நடித்து அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள், நடிகைகளும் உண்டு. ஏனென்றால், விளம்பரங்கள் தான் அதிக வருமானம் ஈட்டுகின்றன. பிராண்ட் ஒப்புதல்கள் தான் விளம்பரங்களைக் காட்டிலும் அதிக வருமானம் கொடுக்கின்றன. ஆனால் இது எப்போதும் இல்லை.
இந்தியாவில் விளம்பரங்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 1988 ஆம் ஆண்டில் விளம்பரத்தில் நடிப்பதற்கு ரூ.1 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். இதே போன்று கபில் தேவ் விளம்பரத்தில் நடிப்பதற்கு 3 வருடத்திற்கு ரூ.25 லட்சம் என்று 1993 ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார்.
அந்த காலகட்டங்களில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஒரு படத்திற்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையில் சம்பளம் பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அந்த காலகட்டத்தில் அவர்கள் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கான நேரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று கூட சொல்லலாம். ஏனென்றால் வருடத்திற்கு 8 முதல் 9 படங்கள் வரை பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம்.
மேலும், சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று தைரியமாக கூறியிருக்கிறார். அதோடு அந்த நேரங்களில் அவர் அரசியலுக்கு வரவும் அதிக ஆசைப்பட்டுள்ளார். சமீபத்தில் வந்த வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் ரூ.125 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
2003 ஆம் ஆண்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பல பிராண்டுகளுக்கு 5 முதல் 15 ஆண்டுகளுக்கு ரூ.250 கோடி முதல் ரூ.350 கோடி வரையில் சம்பளம் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. சிம்ரன், விவேக் ஆகியோர் ஃபேண்டா, மிரிண்டா ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தனர்.
சூர்யா ஹேர் ஆயில் நிறுவனத்தில் ரூ.10 கோடி சம்பளத்தில் நடித்தார். மாதவனும் கார்த்தியும் ஏர்டெல் மற்றும் நெஸ்கேஃப் நிறுவனத்துடன் இணைந்து நடித்தனர். அஜித் வோடஃபோன் நிறுவனத்துடன் இணைந்து ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், கொள்கையின் காரணமாக விளம்பரங்களில் நடிப்பதை நிராகரித்த முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
விஜய் ரூ.125 கோடிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்துடனும், விக்ரம் மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடேட் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில் விளம்பரத்தில் நடிக்காததற்கு ரஜினிகாந்த் மீது அப்போது விமர்சனமும் எழுந்திருக்கிறது.