Aaha Kalyanam Cast Salary
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பொதுவாகவே, இளவட்ட ரசிகர்களை டார்கெட் செய்து தான் எடுக்கப்படுகின்றன. ஒரே மாதிரியான கதைக்களம் கொண்ட சீரியல்களை பார்த்து போர் அடித்த இல்லத்தரசிகளும், விஜய் டிவி சீரியல்கள் தொடர்ந்து புது அனுபவத்தை கொடுத்து வருகிறது. இதன் காரணமாகவே விஜய் டிவி சீரியல்கள் எளிதில் ரசிகர்கள் மனதை கவர்ந்துவிடுகிறது.
Vijay tv Serial
இந்த சீரியலில் ஹீரோவாக விக்ரம் ஸ்ரீ நடிக்க, ஹீரோயினாக அக்ஷயா கண்டமுதன் நடித்து வருகிறார். இவர்களை தவிர, விபீஷ் அஸ்வந்த், ஆர்.ஜி.ராம், காயத்திரி ஸ்ரீ, பவ்ய ஸ்ரீ, ஆகியோரும் இரண்டாவது ஹீரோ - ஹீரோயின் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் விறுவிறுப்பாகவும், எதிர்பாராத ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Aaha Kalyanam Serial update
அதன்படி ராஜலட்சுமி ரோலில் நடித்து வரும் அனிதா, ஒருநாளைக்கு சம்பளமாக 8,000 முதல் 10,000ஆயிரம் வரை பெறுகிறார். கோடீஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மௌனிகா திரைப்பட பிரபலம் என்பதால் இவருக்கு 15,000 முதல் 18,000 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆடிட்டர் ஸ்ரீதர் மற்றும் கௌசல்யா செந்தாமரை ஆகியோர் ரூ.10,000 முதல் 12,000 வரை சம்பளமாக வாங்குகிறார்கள். வில்லி ரோலில் நடித்து வரும் ஷில்பா 12,000 முதல் 15,000 வரை பெறுகிறார்.
விவாகரத்தான நடிகையுடன் திருமணம்! பத்தே மாதத்தில் வளைகாப்பு; சன் டிவி சீரியல் ஹீரோவுக்கு குவியும் வாழ்த்து!
Aaha Kalyanam Serial Actors Salary
பிரபா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பவ்யஸ்ரீ, ஒரு நாளைக்கு 8000 சம்பளமாக பெறுகிறார். விஜய் ரோலில் நடித்து வரும் ராம் 8000 முதல் 10,000 வரை சம்பளமாக பெறுகிறார். இரண்டாவது மெயின் லீடாக ஐஸ்வர்யா ரோலில் நடித்து வரும் காயத்ரி ஸ்ரீ 10,000 முதல் 15,000 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார். கௌதம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விபீஷ், ஒருநாள் சம்பளமாக 7,000 முதல் 10,000 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்.
Aaha Kalyanam Serial
ஹீரோயின் கதாபாத்திரத்தில், மஹாலக்ஷ்மியாக நடிக்கும் அக்ஷயா 20,000 முதல் 22,000 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார். விக்ரம் ஸ்ரீ 15,000 முதல் 18,000 வரை சம்பளமாக பெருகிறாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மஹா - சூர்யா இருவரும் கிட்ட தட்ட சேர்ந்து வாழ தயாராகி விட்டனர். மஹாவை வெறுத்து கொண்டிருந்த மாமியார் ராஜலட்சுமியும் இவரை ஏற்று கொண்டதால் இந்த சீரியல் கூறிய விரைவில் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்க் ஸ்மிதாவுக்கு மகன் இருக்கிறாரா? தற்கொலைக் கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?