கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களோடு இணைந்து இவர் நடித்து வந்தாலும், இன்று வெளியாகும் இளம் நடிகர்களுடைய திரைப்படத்திற்கு போட்டியாக அமைகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் என்றால் அது சற்று மிகையல்ல. 74 வயதிலும் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பலரும் பாராட்டுவதற்கு காரணம், அவர் நடிப்பு என்பதை தாண்டி அவரிடம் உள்ள பல நல்ல குணாதிசயங்கள் தான். அந்த நல்ல குணாதிசியங்கள் குறித்து அண்மையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.