இதுவே ஒரு பெண் செய்திருந்தால்..? ரன்வீர் சிங் நியூடு போட்டோ ஷூட் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

Published : Jul 23, 2022, 02:01 PM IST

பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான மிமி சக்ரவர்த்தி, ரன்வீர் சிங்கின் சமீபத்திய நிர்வாண போட்டோஷூட் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

PREV
18
இதுவே ஒரு பெண் செய்திருந்தால்..? ரன்வீர் சிங் நியூடு போட்டோ ஷூட் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

ஆடைகளில் கூட தனித்துவமான டிசைகளுடன் கூடிய ஆடைகளை அணியும், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை கிளப்பியது.
 

28

பேப்பர் மேக்ஸீனின்  அட்டைப்படத்திற்காக இவர் நிர்வாணமாக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை, டிஜிட்டல் கிரியேட்டர், டயட் சப்யா என்பவர் பகிர்ந்திருந்தார். 

மேலும் செய்திகள்: Suriya Birthday: நடிகர் சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரள வைத்த டாப் 5 திரைப்படங்கள்!
 

38

ரன்வீர் சிங்கின் இந்த போல்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு, சிலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தாலும், பலர் பாராட்டுகளையும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
 

48
Mimi chakraborty

இந்நிலையில் பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான மிமி சக்ரவர்த்தி, ரன்வீர் சிங்கின் புகைப்படங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: நடன இயக்குனர் ஷோபி - லலிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்து...
 

58

அதாவது இதுவே அவர் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் எந்த மாதிரியான எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் என கேள்விகளை எழுப்பியுள்ளார் மிமி சக்கரவர்த்தி.

68

மேலும் இவர் போட்டுள்ள பதிவும் இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் கூறியுள்ளதாவது இதுவே ஒரு பெண்ணாக இருந்திருந்தால் இந்த புகைப்படங்கள் பாராட்டும் ஒன்றாக இருக்குமா என கேட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் வீட்டை எரிக்க வேண்டும், போராட்டங்களை நடந்த வேண்டும் என கூறி இருப்பார்கள் .அதே போல் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுப்பது அவளை அவமான படுத்துவது போன்ற செயல்களை செய்திருப்பார்கள் என பொங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: ஒருவேளை சாப்பாடு 46 ஆயிரம் ரூபாயா? பில்லை பார்த்து ஷாக்கான பிரபலம்!
 

78

பின்வரும் ட்வீட்டில், 'சமத்துவம் பற்றி நாம் பேசுகிறோம், அது எங்கே இருக்கிறது? உங்கள் பார்வையில் எதையாவது மாற்றலாம் அல்லது முற்றிலும் அழிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும். எங்கள் பார்வையை விரிவுபடுத்துங்கள், ஏனெனில் உடல் நிறைய தியாகத்துடன் வருகிறது என தெரிவித்துள்ளார்.

88

மிமி சக்ரவர்த்தியின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருவது ஒரு புறம் இருந்தாலும், பலர் இவருக்கு ஆதரவாக தற்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories