அட ரோலெக்ஸ விடுங்க பாஸ்.. காதலிக்கும்போதே ஜோதிகாவுக்காக சூர்யா முதன்முதலில் நடிச்ச கேமியோ ரோல் பற்றி தெரியுமா?

Published : Jul 23, 2022, 01:27 PM ISTUpdated : Jul 23, 2022, 01:28 PM IST

Suriya jyothika : நடிகர் சூர்யா, அவன் இவன், விக்ரம், மன்மதன் அம்பு, கோ, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் அவர் அவ்வாறு நடித்த முதல் படம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
அட ரோலெக்ஸ விடுங்க பாஸ்.. காதலிக்கும்போதே ஜோதிகாவுக்காக சூர்யா முதன்முதலில் நடிச்ச கேமியோ ரோல் பற்றி தெரியுமா?

தமிழ் சினிமாவில் எந்த ஒரு ரோல் கொடுத்தாலும் அசராமல் நடித்து அப்லாஸ் வாங்குபவர் என்றால் அது சூர்யா தான். இவருக்கென தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிடுகின்றன. அதுமட்டுமா இவர் கேமியோ ரோலில் நடிச்சாலும் அந்த படம் ஹிட் ஆகிவிடுகின்றன.

25

அந்த வகையில் இவர் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக நடிப்பில் மிரட்டி இருந்தார். இவரது அந்த கேரக்டர் 5 நிமிடங்களே வந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றது என்றால் அதில் அவர் நடித்த விதம் தான். சூர்யாவை இதுவரை இப்படி ஒரு கேரக்டரில் பார்த்ததில்லை என சொல்லும் அளவுக்கு ஆச்சர்யப்படுத்தி இருந்தார்.

35

இப்படி இவர் கேமியோ ரோலில் நடிப்பது இது முதன்முறை அல்ல இதற்கு முன் ஏராளமான படங்களில் சூர்யா அவ்வாறு நடித்திருக்கிறார். அந்த வகையில் மாதவனின் ராக்கெட்ரி, பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம், பாலா இயக்கிய அவன் இவன், கமலின் மன்மதன் அம்பு, கே.வி.ஆனந்த் இயக்கிய கோ என பல்வேறு படங்களில் ஒரு சிறிய ரோலிலோ, அல்லது பாடல் காட்சியிலோ வந்து தலைகாட்டிவிட்டு சென்றிருந்தார் சூர்யா.

இதையும் படியுங்கள்... Suriya Birthday: நடிகர் சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரள வைத்த டாப் 5 திரைப்படங்கள்!

45

ஆனால் அவர் முதன்முதலில் நடித்த கேமியோ ரோல் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அவரது காதல் மனைவி ஜோதிகா நடிப்பில் வெளியான ஜூன் ஆர் என்கிற படத்திற்காக தான் நடிகர் சூர்யா முதன்முதலாக கேமியோ ரோலில் நடித்தார். அப்படத்திலும் கிளைமேக்ஸில் தான் ஒரு 2 நிமிட சீனில் நடித்திருப்பார் சூர்யா. தாயின் மறைவைத் தாங்க முடியாமல் மழையில் கதறி அழும் ஜோதிகாவை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் ஒரு எமோஷனல் காட்சியில் நடித்திருப்பார் சூர்யா. அந்த காட்சிகள் அவ்வளவு அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

55

இப்படத்தை ரேவதி எஸ் வர்மா என்கிற பெண் இயக்குனர் இயக்கினார். இப்படத்தில் நடிக்கும் போது சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து வந்தனர். ஜோதிகா கேட்டுக்கொண்டதன் ஒரே காரணத்திற்காக ஜூன் ஆர் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடித்தாராம். அவர் நடித்த முதல் கேமியோ ரோலும் இதுதான்.

இதையும் படியுங்கள்... ‘நடிப்பின் நாயகன்’ சூர்யாவுக்கு முதல் தேசிய விருது... எட்டுத்திக்கிலும் இருந்து குவிந்த வாழ்த்து மழை

Read more Photos on
click me!

Recommended Stories