வாழ்த்து பெற வந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.... சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சர்யப்படுத்திய ரஜினி

Published : Jul 23, 2022, 11:53 AM IST

Praggnanandhaa : செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இன்று தனது குடும்பத்தினருடன் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துபெற்றுள்ளார். 

PREV
14
வாழ்த்து பெற வந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.... சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சர்யப்படுத்திய ரஜினி

சென்னையைச் சேர்ந்த 16 வயது இளைஞனான பிரக்ஞானந்தா கடந்த 2018 ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்த இவருக்கு பல்வேறு பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். 

24

இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை படத்து வரும் பிரக்ஞானந்தா, அடுத்ததாக வருகிற ஜூலை 28-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார். இதிலும் அவர் வெற்றிபெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா... தி கிரே மேன் படம் பார்த்து கடுப்பான தனுஷ் ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

34

இந்நிலையில், பிரக்ஞானந்தா இன்று தனது குடும்பத்தினருடன் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துபெற்றுள்ளார். செஸ் தொடர்களில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் பிரக்ஞானந்தாவை வியந்து பாராட்டிய ரஜினி, அடுத்ததாக நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தினார்.

44

அதுமட்டுமின்றி பிரக்ஞானந்தாவிற்கு செஸ் போர்ட் ஒன்றையும், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றைவும் பரிசாக வழங்கினார் ரஜினி. இதுகுறித்து புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பிரக்ஞானந்தா, “மறக்க முடியாத நாள், இன்று ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன். இவ்வளவு உயரங்கள் சென்றும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... யம்மாடியோ... குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை இத்தனை லட்சமா..!

Read more Photos on
click me!

Recommended Stories