இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா... தி கிரே மேன் படம் பார்த்து கடுப்பான தனுஷ் ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

Published : Jul 23, 2022, 11:21 AM IST

The Gray Man : அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

PREV
15
இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா... தி கிரே மேன் படம் பார்த்து கடுப்பான தனுஷ் ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஃபஹீர் என்கிற ஹாலிவுட் படத்தில் நாயகனாக நடித்திருந்த தனுஷ், தற்போது அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார்.

25

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னா டி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

35

இப்படத்திற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிரமாக புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் ஒன்றுவிடாமல் கலந்துகொண்டார். சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இந்தியா வந்த போதுகூட அவர்கள் தனுஷை முன்னிலைப்படுத்தி தான் தி கிரே மேன் படத்தை புரமோட் செய்தனர்.

இதையும் படியுங்கள்... யம்மாடியோ... குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை இத்தனை லட்சமா..!

45

படக்குழு இப்படி தனுஷுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், படத்தில் தனுஷுக்கு செம்ம வெயிட்டான ரோல் இருக்கும் என ஆவலோடு சென்று படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நடிகர் தனுஷுக்கு மிகவும் சிறிய கதாபாத்திரம் மட்டுமே படத்தில் கொடுத்துள்ளனர். அவர் வரும் காட்சிகள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன.

55

இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிலர் கடுப்பில் இதற்கு தான் இவ்வளவு பில்டப்பா என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்தை இந்தியாவில் பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க வைத்துவிட்டு, அவர் தான் படத்தின் ஹீரோ என்கிற ரேஞ்சுக்கு புரமோட் செய்த படக்குழுவை தனுஷ் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  தேசிய விருதால் பெருமகிழ்ச்சி! ஜோவிற்கும், என் பிள்ளைகளுக்கும் இந்த விருதை உரித்தாக்குகிறேன்- சூர்யா நெகிழ்ச்சி

Read more Photos on
click me!

Recommended Stories