2 படங்களில் 750 கோடி வசூல் அள்ளிய மில்க் பியூட்டி நடிகையா இது? யார் இந்த சிறுமி தெரிகிறதா?

Published : May 28, 2025, 10:19 AM IST

தமிழில் கடைசியாக நடித்த இரண்டே படங்களில் சுமார் ரூ.750 கோடி வசூல் அள்ளிய நாயகியின் குழந்தைப்பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
16
Tamil Actress Rare Childhood Photos

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான நடிகை ஒருவர், இன்று பாலிவுட், டோலிவுட் என பான் இந்தியா அளவில் செம பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு 35 வயது ஆன போதிலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். அண்மையில் தான் இவர் காதல் முறிவை சந்தித்தார். பாலிவுட் நடிகரை உருகி உருகி காதலித்த இந்த நடிகை பின்னர் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார்.

26
யார் இந்த மில்க் பியூட்டி?

இந்த நடிகை தமிழில் கடைசியாக நடித்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதில் ஒன்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்திருந்தார். 2 மெகா ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் இவருக்கு தற்போது தமிழில் கைவசம் ஒரு படம் கூட இல்லை. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த நடிகை, தன்னுடைய முழு கவனத்தையும் தற்போது பாலிவுட் பக்கம் திருப்பி இருக்கிறார்.

36
தமன்னாவின் குழந்தை பருவ புகைப்படம்

அந்த நடிகை வேறுயாருமில்லை... தமன்னா தான். ரசிகர்களால் மில்க் பியூட்டி என கொண்டாடப்படும் தமன்னா, தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய கேடி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

46
பான் இந்தியா நாயகி தமன்னா

கல்லூரி படம் வரை அடக்க ஒடுக்கமான ரோல்களில் நடித்து வந்த தமன்னா, அதன்பின்னர் கிளாமர் ரூட்டுக்கு திரும்பினார். அதன் பயனாக விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தொடர்ந்து கோலிவுட்டின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

56
தமன்னா காதல் முறிவு

நடிகை தமன்னா கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக அறிவித்தார். இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வந்தனர். இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து பிரிந்தார்.

66
பாக்ஸ் ஆபிஸ் குயின் தமன்னா

தமன்னா நடிப்பில் தமிழில் கடைசியாக ஜெயிலர் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் ஜெயிலர் திரைப்படம் ரூ.650 கோடி வசூலித்தது. அதேபோல் அரண்மனை 4 திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தது. இப்படி இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தும் தமன்னாவுக்கு தற்போது தமிழில் ஒரு படம் கூட இல்லை. அவரின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories