விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் மே 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஆறுமுககுமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'போல்ட் கண்ணன்' என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 7 சிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
24
ஏஸ் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் மந்தமான வசூல்
முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட ஏஸ் படத்தில், விஜய் சேதுபதி ஏற்று நடித்துள்ள போல்ட் கண்ணன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. குறிப்பாக அவரும் யோகிபாபுவும் வரும் காமெடி காட்சிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை. ஐந்து நாட்களில் உலகளவில் 5 கோடி மட்டுமே வசூலித்துள்ள இப்படம் நேற்று தமிழ்நாட்டில் வெறும் 43 லட்சம் மட்டுமே வசூலித்து இருக்கிறது.
34
ஏஸ் பட வசூல் சரிவுக்கு காரணம் என்ன?
ஏஸ் திரைப்படம் வெளியான நாளில் இருந்து நேற்று தான் மிகக்குறைவான வசூலை அப்படம் வசூலித்து இருக்கிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் சில நாட்களில் இப்படத்தை திரையரங்குகளில் இருந்து தூக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. ஏஸ் திரைப்படம் வசூலில் டம்மி ஆனதற்கு அதன் புரமோஷனும் ஒரு காரணம் என்றே கூறலாம். ஏனெனில் அப்படத்தை படக்குழு பெரியளவில் புரமோட் செய்யவில்லை. இதுவே அதன் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்டில் எதிரொலிக்கிறது.
பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க ஒரு மாஸ் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாகும். கரண் பகத் ரௌத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசையும், ஏ.கே. முத்து கலை இயக்கமும் செய்துள்ளனர். ஏஸ் திரைப்படம் நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படமாகும். அவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன முதல் படம் ஏஸ் என்பது குறிப்பிடத்தக்கது.