மறைந்த கேப்டன் விஜயகாந்த் பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் தங்கி இருந்தபோது, அங்கு விற்கப்படும் காபியின் விலையை கேட்டுவிட்டு ஹோட்டல் ரூமை காலி செய்துள்ளார். இதன் பின்னணியை அவருடன் பணியாற்றிய இணை தயாரிப்பாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடித்த பல படங்களில் இணை தயாரிப்பாளராக பயணி ஆற்றியவர் ராம வாசு. இவர் ‘வாஞ்சிநாதன்’, ‘மரியாதை’ போன்ற படங்களில் விஜயகாந்த் உடன் பணியாற்றிய பொழுது நடந்த சில சம்பவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “வாஞ்சிநாதன் படம் ஹைதராபாத் ராமோஜில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில் வேறு ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன்.
24
ரூ.20 காபியே எனக்கு போதும்
காலையில் 6:00 மணி இருக்கும். அப்போது லுங்கியுடன் கையில் பெட்டியுடன் கேப்டன் நடந்து வந்து கொண்டிருந்தார். என்ன ஆனது சார் எனக் கேட்டேன். நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள் என விஜயகாந்த் கேட்டார். நான் எதிரில் தங்கியிருக்கேன் என்று சொன்னேன். நானும் அங்கேயே வந்து விடுகிறேன் என அவர் கூறினார். ஏன் எனக் கேட்டதற்கு, அவன் ஒரு காபிக்கு 80 ரூபாய் போடுறான் பா, 80 ரூபாய்க்கு காபி குடித்துவிட்டு என்ன பண்றது? நான் இங்கே வந்துடறேன். இங்க உள்ள காபியே போதும். 80 ரூபாய்க்கு காபி குடித்தால் என்ன? 20 ரூபாக்கு காப்பி குடித்தால் என்ன என்று கேட்டுவிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் எங்களுடனே வந்து தங்கி விட்டார்.
34
‘மரியாதை’ பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்
அதேபோல் ‘மரியாதை’ பட ஷூட்டிங் பாங்காக்கில் நடைபெற்றது. பாங்காக் வந்து இறங்கியவுடன் எனக்கும், டைரக்டர் விக்ரமனுக்கும் பயங்கர வாக்குவாதம். அதை கேப்டன் வந்து விலக்கி விட்டார். அடுத்த நாளிலிருந்து அவர் எங்களுக்கு மேனேஜர் போல் செயல்பட்டார். இங்க இருந்து அங்கே போய் சொல்வதும், அங்கே இருப்பதை எங்களிடம் வந்து சொல்லிக் கொண்டிருந்தார். நீங்கள் ஒரு கட்சியின் தலைவர் எதற்கு இந்த வேலை என்று நான் கேட்டேன். அதற்கு, இங்கே உனக்கும் அவருக்கும் மனஸ்தாபம் அதற்காக வேலையை நிறுத்த முடியாது. நாம் சூட்டிங்கிற்காக வந்திருக்கிறோம். அதை நல்லபடியாக முடித்துவிட்டு போக வேண்டும் என கேப்டன் கூறினார். அதோடு அந்த பஞ்சாயத்து முடிந்தது.
அந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸில் கூட விஜயகாந்த் என்னை குறித்து பேசினார். எல்லோரும் ராம வாசு என்ற ஒருத்தரை மறந்துட்டாங்க. அவர் கொஞ்சம் கட் அண்ட் ரைட்டா தான் பேசுவாரு. அது சிலருக்கு பிடிக்கும். பலருக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் எனக்கு ராம வாசுவை ரொம்ப பிடிக்கும் என்று பேசினார் .அது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது” என்று ராம வாசு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.