Actor MGR
புரட்சி தலைவர், பொன்மன் செம்மல் என்று கொண்டாடப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர். மக்கள் திலகம் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் வாரி வழங்கும் வள்ளல் என்று அழைக்கப்படுகிறார். நடிகர் என்பதை தாண்டி மக்கள் போற்றும் தலைவனாகவும் எம்.ஜி.ஆர் கொண்டாடப்படுகிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு முதலமைச்சரான அவர் ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்டங்களையும் வழங்கி உள்ளார். புதிதாக அரசியல் கட்சி தொடங்குவர்கள் கூட எம்.ஜி.ஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறி வருகின்றனர்.
MGR
எம்.ஜி.ஆருக்கு திடீரென கிட்னி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அவர் மயக்கமடைந்துவிட்டார். இப்போது இருப்பது போல மருத்துவ வசதிகள் இல்லை. எனவே மூத்த மருத்துவ நிபுணர் ஒருவர் வழிகாட்டுதலின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு என்பவர் வரவழைக்கப்பட்டாராம்.
MGR
அவர் மிகவும் பிசியான டாக்டர். மேலும் இப்போது இருப்பது அப்போது விமான சேவைகளும் அதிகமாக இல்லை. எம்.ஜி.ஆரின் வலது கரமாக செயல்பட்ட ஆர்.எம்.வீரப்பன், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசி சிங்கப்பூர் – இந்தியா விமானத்தை 3 மணி நேரம் தாமதப்படுத்தினார். ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்த டாக்டர் கானு அந்த விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
Ambika, Radha
எம்.ஜி.ஆருக்கு அவர் சிகிச்சை அளிக்க தொடங்கி உடன், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தனக்கு கான்பிரன்ஸ் இருப்பதால் உடனடியாக கிளம்ப வேண்டும் என்று காணு கூறியுள்ளார். ஆனால் வீரப்பனுக்கோ மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனால் என்ன செய்வதென்று பயம். எனவே அப்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளாக வலம் வந்த அம்பிகா, ராதா இருவரும் டாக்டர் காணுவை கவனித்துக் கொண்டார்களாம்.
இளையராஜா காப்பி அடித்த பாடல்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Ambika Studio
இதனால் டாக்டர் காணு சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்தார். எம்.ஜி.ஆரின் உடல்நலம் தேறியது. மீண்டு வந்த எம்.ஜி.ஆர் 40 ஏக்கர் அரசு நிலத்தை அம்பிகா, ராதா இருவருக்கும் இலவசமாக வழங்கினார். அந்த இடத்தில் அம்பிகா, ராதா இருவரும் ஏ.ஆர்.எஸ் என்ற ஸ்டூடியோவை கட்டினர். 1984-ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் தான் இந்த ஸ்டூடியோவை தொடங்கி வைத்தார்.
Radha and Ambika
இந்த ஸ்டூடியோவில் பல படப்பிடிப்புகள் நடந்தது. காலங்கள் மாற ஸ்டூடியோக்களின் தேவை குறைந்ததால் அந்த ஸ்டூடியோ தற்போது நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டது. எனினும் இந்த 40 ஏக்கர் நில விவகாரம் அப்போது மிகப்பெரிய சர்ச்சையானது. ஆனால் அன்று எம்.ஜி.ஆர் வழங்கிய 40 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு சுமார் 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.