தேசிய விருதை வென்ற நித்யா மேனனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published : Aug 17, 2024, 10:31 AM IST

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நித்யா மேனன், திருச்சிற்றம்பலம் படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். பத்திரிகையாளராக ஆசைப்பட்ட இவர், திரைப்படத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். நடிகை நித்யா மேனன், தற்போது காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார்.

PREV
15
தேசிய விருதை வென்ற நித்யா மேனனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Nithya Menen Net Worth

70வது தேசிய திரைப்பட விருதுகள் 2022 ஆம் ஆண்டில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டன. நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் ஆகியோர் சிறந்த நடிகைக்கான வெற்றியாளர்களாக கூட்டாக அறிவிக்கப்பட்டனர்.

25
Thiruchitrambalam

தனுஷ் நடிப்பில், அனிருத் இசையில் வெளியான திருச்சிற்றம்பலத்தில் ஷோபனாவாக நடித்ததற்காக நித்யா மேனன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.  இது அவரது முதல் தேசிய திரைப்பட விருது. உஸ்தாத் ஹோட்டல், மெர்சல், 24, மற்றும் காஞ்சனா 2 போன்ற மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஹிட்களில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

35
Nithya Menen

கடந்த 2022 இல் தி க்விண்டிடம் பேசிய நித்யா, "நான் பத்திரிக்கையாளராக ஆக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் குடும்பத்தினர் வந்து நான் ஏதோ தவறு செய்வது போல் எனக்கு அறிவுரை வழங்கினார்கள். நடிகை நித்யா மேனன் 2019 ஆம் ஆண்டு மிஷன் மங்கள் என்ற படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

45
National Awards Best Actress

அதில் நித்யா மேனன் செயற்கைக்கோள் பொறியாளர் வர்ஷா பிள்ளையாக நடித்தார்.  மிஷன் இயக்குனர் ராகேஷ் தவானாக நடித்த அக்ஷய் குமாருடன் நடித்தார். தற்போது அவர் தமிழில் உருவாகி வரும் காதல் காமெடி படமான காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

55
Actress Nithya Menen

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்போது 7வது முறையாக தேசிய விருது வென்ற ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகை நித்யா மேனனின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கும்போது,  இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories