45 நிமிடத்தில் 9 பாடல்களுக்கு ட்யூனா? எல்லா பாட்டுமே சூப்பர் ஹிட், யாரு போட்டது எந்தப் படம் தெரியுமா?

First Published | Aug 17, 2024, 9:51 AM IST

இசைஞானி இளையராஜா தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர் எண்ணிலடங்கா ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இயக்குனர் ஆர்.கே. செல்வமணி செம்பருத்தி படத்தில் இளையராஜா உடனான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Ilaiyaraaja

இளையராஜா என்ற பெயருக்கு நிச்சயம் அறிமுகம் தேவையில்லை. இசை ஞானி, இசை கடவுள், இசை அரசன என பல பெயர்களால் போற்றப்படும் அவர் தனது இசையின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். படம் நன்றாக இல்லை என்றாலும் இளையராஜாவின் பாடல்களுக்குக்காகவே ஹிட்டான எத்தனை படங்களை உதாரணமாக சொல்லலாம். 

Ilaiyaraaja

1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இசையின் அரசன் இளையராஜா எண்ணிலடங்கா ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இன்றைக்கும் இரவில் இளையராஜா பாடல்களை கேட்டு தூங்கும் பலர் இருக்கின்றனர். தலைமுறைகளை கடந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரின் ப்ளே லிஸ்டுகளை இளையாராஜாவின் பாடல்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. 

Tap to resize

Ilaiyaraaja

இளையராஜா பற்றிய சுவாரஸ்ய தகவல்களை அவரிடம் பணிபுரிந்தவர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இளையாராஜாவின் சாதனை குறித்து பேசியுள்ளார். செம்பருத்தி படத்தில் இளையராஜா உடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து அவர் பேசி உள்ளார்.

படம் அட்டர் பிளாப்... ஆனாலும் தயாரிப்பாளர் ஹாப்பி! 10 மடங்கு லாபம் ஈட்டி தந்த இளையராஜாவின் ஒரே பாட்டு

Ilaiyaraaja

இதுகுறித்து சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ செம்பருத்தி படத்தின் 9 பாடல்களுக்கு இளையராஜா ஒரே நாளில் டியூன் போட்டு கொடுத்தார். அதுவும் 45 நிமிடங்களில் ட்யூன் போட்டார்.  செம்பருத்தி பாடல்களை இன்று கேட்டாலும் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். 

Rk Selvamani

இத்தனைக்கும் பாடல்கள் இப்படி வேணும், அப்படி வேணும் என்று எதையும் நான் கேட்கவில்லை. இதுமாதிரி ஒரு டூயட், இந்த பாட்டில் வாழ்க்கையை சொல்ல வேண்டும். . படகோட்டி பாடல் மாதிரி ஒன்று வேண்டும் என்று தான் சொன்னேன். நான் கதை மற்றும் பாடல்களுக்கான சொல்லி வெறும் 45 நிமிடத்தில் அனைத்து பாடல்களுக்கும் ட்யூன் போட்டு கொடுத்தார். அவர் ஒரு சிறந்த மனிதர்.. சரியான முறையில் அவரிடம் பழக வேண்டும். அவர் மனம் புண்படும் படி பேசிவிடக்கூடாது.. ” என்று தெரிவித்தார்.

கஷ்டத்தில் துவங்கி.. சேவையில் முடிந்த வாழ்க்கை - இறப்பிலும் கோடிகளை நன்கொடையாக கொடுத்த தமிழ் நடிகை!

Ilaiyaraaja

1992-ம் ஆர்.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம் செம்பருத்தி. இந்த படத்தின் மூலம் தான் ரோஜா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!