பாகிஸ்தானை பதம் பார்த்த இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் ஐ எம் விஜயனின் சாதனைகள்!

First Published | Aug 16, 2024, 5:36 PM IST

கால்பந்து விளையாட்டிலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்த பிரபலங்களில் ஒருவரான ஐ.எம்.விஜயன், இந்திய கால்பந்து அணியில் தனது திறமையால் பல சாதனைகளை படைத்தவர். 1992 முதல் 2003 வரை இந்திய அணிக்காக விளையாடிய இவர், பாகிஸ்தான், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.

I M Vijayan

விளையாட்டிலிருந்து நடிகராக வந்தவர்களின் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரரான ஐ எம் விஜயன் ஒருவராக இருக்கிறார். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்று விளையாடி பாகிஸ்தான், இலங்கை, அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் உள்பட பல அணிகளை தோற்கடித்து பல சாதனைகளை படைத்துள்ளார். கேரளா மாநிலம் திருச்சூரில் 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி பிறந்தவர் நடிகர் ஐ எம் விஜயன்.

I M Vijayan Sports Player

கால்பந்து வீரராக தனது வாழ்க்கையை தொடங்கிய விஜயன் முதலில் கேரளா போலீஸ் கால்பந்து அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். அப்போது அவருக்கு இந்திய கால்பந்து அணியில் வாய்ப்பு கிடைத்து, இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்திருக்கிறார். கால்பந்து விளையாட்டில் ஹாலோ ஹிரன் (பிளாக்பக்) என்று அழைக்கப்பட்டார்.

Latest Videos


Indian Football Player

பாகிஸ்தான், ஹாங்காங், இலங்கை, நேபாள், அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, ஐக்கிய அரபு நாடுகள், வட கொரியா ஆகிய அணிகளுக்கு எதிராக பல வெற்றிகளை குவித்துள்ளார். சிறந்த ஸ்டிரைக்கரான விஜயன் இந்திய அணியின் கேப்டனாக இருந்து பல சாதனைகளை படைத்துள்ளார்.

I M Vijayan

பல போட்டிகளில் சிறந்த பிளேயராகவும் திகழ்ந்திருக்கிறார். SAFF Championship தொடரில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் டிராபி வென்றது. இதே போன்று 1997 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இந்தியா சாம்பியன்ஷிப் டிராபி வென்றது. 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. இந்திய அணிக்காக 72 போட்டிகளில் இடம் பெற்று விளையாடிய விஜயன் 29 கோல் அடித்துள்ளார்.

Actor I M Vijayan

இந்திய கால்பந்து அணியில் சிறந்து விளங்கியதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் விஜயனுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற விஜயன் கால்பந்து பள்ளி மீது திருப்பியுள்ளார். திருச்சூரில் கால்பந்து ஸ்கூல் தொடங்கி நடத்தி வருகிறார். அதோடு, பாக்ஸர் ஸ்போர்ட்ஸ் கூட்ஸ் கம்பெனி என்ற உபகரண நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

I M Vijayan

விளையாட்டு தவிர தமிழில் திமிரு, கொம்பன், கெத்து, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!