காந்தாராவில் மிரட்டிய ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது!

First Published | Aug 16, 2024, 2:46 PM IST

சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கும் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. காந்தாரா படத்தில் நடித்ததற்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரும் வசூல் சாதனை படைத்த காந்தாரா படத்தில் பூத கோலா நாட்டுப்புற நடன கலைஞராக ரிஷப் ஷெட்டி தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

Rishabh Shetty - Kantara

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக 1954 ஆம் ஆண்டு முதல் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான், 70ஆவது தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டது. தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது அறிவித்தது. இதில், மொழி வாரியாக சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடன இயக்குநர், சிறந்த இசைமைப்பாளர்களுக்கு என்று விருது அறிவிக்கப்பட்டது.

Best Actor Rishabh Shetty - Kantara

இந்த நிலையில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காந்தார படத்தின் சிறந்த நடிகருக்கான விருது ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தாரா படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி, அந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.400 முதல் ரூ.450 கோடி வரையில் வசூல் குவித்தது.

Tap to resize

Kantara Movie - Best Actor Rishabh Shetty

இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி பூத கோலா நாட்டுப்புற நாட்டியம் ஆடும் ஒரு கலைஞராக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கலையின் மூலமாக தனது மக்களுக்கு தாங்கள் இழந்தவற்றை மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

Kantara

இந்த நிலையில் தான் மலையாளத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டது. இதே போன்று சிறந்த படத்திற்கான தேசிய விருது Saudi Vellakka படத்திற்கு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Kantrara Movie Awards

இந்தியாவின் 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி விருது வென்றது. அதோடு, 11ஆவது சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகருக்கான (விமர்சகர்கள்) விருது வென்றது. மேலும், 68ஆவது பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!