Ponniyin Selvan part 1
தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டு ரிலீஸ் ஆன படங்களுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் சிறந்த மொழி படங்களுக்கான முதலில் அறிவிக்கப்பட்டன. அதில் தமிழில் சிறந்த படமாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளன. இப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.
Ponniyin Selvan part 1 won 4 National Awards
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும், திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணியாகவும் நடித்திருந்த இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றி இருந்தார்.
Ponniyin Selvan part 1 National Awards
மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சுமார் ரூ.500 கோடி வசூலை வாரிக்குவித்தது. வசூல் ரீதியாக சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது தேசிய விருதுகளையும் வென்று குவித்துள்ளது. அப்படத்திற்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. அதன்படி சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் முதல் பாகம் தான் வென்றிருக்கிறது.
National Awards for Ponniyin Selvan part 1
இதுதவிர அப்படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தட்டிச் சென்றுள்ளார். இதுதவிர சிறந்த ஒலியமைப்புக்கான விருதும் பொன்னியின் செல்வன் பாகம் 1-ல் பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பொன்னியின் செல்வன் படத்துக்கு 4 தேசிய விருதுகள் கிடைத்துள்ளதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.