வரலட்சுமி விரதம்.. அம்மன் சிலை அருகே மற்றொரு சிலை.. அனிதா விஜயகுமாரின் க்யூட் போட்டோ..

First Published | Aug 16, 2024, 12:27 PM IST

நடிகர் விஜயகுமாரின் மகள் மற்றும் மருத்துவரான அனிதா விஜயகுமார், வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனை வழிபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை அருகே அனிதா அமர்ந்திருக்கும் விதம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

Anitha Vijayakumar

பழம்பெரும் நடிகரின் மகளும் மருத்துவருமான அனிதா விஜயகுமார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் ஒரு மருத்துவர் என்பதால் ஆரோக்கிய வாழ்க்கை முறை, குழந்தை வளர்ப்பு டிப்ஸ் என பல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
 

Anitha Vijayakumar

விஜயகுமாரின் குடும்பத்தில் சினிமாவில் கால் பதிக்காத ஒரே நபர் என்றால் அது அனிதா தான். அனிதாவுக்கும் பட வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் அவரின் அவர் திரைப்படங்களில் நடிக்க சம்மதம் வழங்கவில்லை என்பதால் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றும் அனிதாவே ஒருமுறை கூறியுள்ளார்.. 

Tap to resize

Anitha Vijayakumar

அனிதா விஜயகுமாரின் கணவரும் ஒரு மருத்துவர் தான். கணவருடன் கத்தாரில் செட்டில் ஆன அனிதாவுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். அனிதாவின் மகள் தியாவும் மருத்துவர் தான். தியாவுக்கும் திலன் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

ரம்பாவுக்கு கவுண்டமணி வீடு பரிசாக கொடுத்தாரா? - பரபரப்பு தகவல்!

Anitha Vijayakumar

ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள், போஸ்ட் வெட்டிங் கொண்டாட்டங்கள் என பல நிகழ்ச்சிகளின் போட்டோக்களும் இணையத்தில் வைரலானது. இதனிடையே சமீபத்தில் தனது தோழிகளுடன் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்தார் அனிதா. இதுதொடர்பான போட்டோக்களையும் அவர் பதிவிட்டிருந்தார்.

Anitha Vijayakumar Varalakshmi Nombu

இந்த நிலையில் இன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அனிதா விஜயகுமார் தனது புதிய வீட்டில் அம்மனை வழிபாடு செய்துள்ளார். வீடு முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலைக்கு அருகே மற்றொரு சிலை போல அனிதா அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாகுமா?

Anitha Vijayakumar

அனிதா விஜயகுமார் வெளிநாட்டில் செட்டிலானாலும் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க அவ்வப்போது இந்தியா வருகிறார். இந்தியாவில் தனக்கென தனி வீடு என்பதற்காக கடந்த ஆண்டு புதிய வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Latest Videos

click me!