ரசிகர்களால் இசைக் கடவுள் என கொண்டாடப்படுபவர் இளையராஜா. அவரது பாடல்கள் தான் இன்றைக்கும் பலரது பிளேலிஸ்டை ஆக்கிரமித்து உள்ளன. அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் இளையராஜா. அன்றைய காலகட்டத்தில் இளையராஜா இருந்தாலே அப்படத்தை விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டு வாங்கி வெளியிடுவார்கள். பெரும்பாலான படங்களை காப்பாற்றியதும் இளையராஜாவின் பாடல்கள் தான்.
24
isaignani ilaiyaraaja
அப்படி இளையராஜாவின் பாடல் மூலம் லாபம் ஈட்டிய படம் பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம். அந்த படத்தின் பெயர் அவதாரம். இப்படத்தில் நடிகர் நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்த இப்படம் கடந்த 1995-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தை இயக்கியதும் நடிகர் நாசர் தான். அவர் இயக்கிய முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அட்டர் பிளாப் ஆனது.
அந்த காலகட்டத்திலேயே ரூ.46 லட்சம் நஷ்டமடைந்ததாம். அப்போதைய சூழலில் இது மிகப்பெரிய தொகையாகும். ஆனாலும் அப்படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷமாக இருந்தாராம். அதற்கு காரணம் அப்படத்தின் பாடல் தான். அது வேறெதுவுமில்லை ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் தான். அப்பாடலை இளையராஜாவே பாடியும் இருந்தார். அவரது குரல் அப்பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்தது. அப்பாடல் முதலில் நாசருக்கு பிடிக்கவில்லையாம்.
44
avatharam movie
பின்னர் வேண்டா வெறுப்பாக படத்தில் வைத்தாராம். அதுதான் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கிறது. அப்பாடலுக்காக மட்டுமே அப்படத்தின் கேசட்டுகளை வாங்கியவர்கள் ஏராளம். அப்போது அவதாரம் படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட்டுகள் மட்டும் சுமார் 20 லட்சம் எண்ணம் விற்பனை ஆனதாம். அந்த கேசட் விற்பனை மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த ஷேர் தொகை மட்டும் ரூ.1.6 கோடியாம்.