Vikram Movie Kamal
70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. அதிலும் இந்த ஆறு விருதுகளையும் இரண்டு தமிழ் படங்கள் தான் வென்றுள்ளன. அதில் ஒன்று மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1. அப்படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மற்றொன்று தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
kamalhaasan with Anbarivu
இதில் மேலும் சில தமிழ் படங்களுக்கும் விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதில் ஒன்று தான் கமல்ஹாசனின விக்ரம் திரைப்படம். இப்படத்திற்கு சிறந்த ஸ்டண்ட் மாஸ்டருக்கான விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விருது கேஜிஎப் 2 படத்துக்கு வழங்கப்பட்டது. இதில் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு படங்களுக்குமே ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியது அன்பறிவு தான்.
இதையும் படியுங்கள்... 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : நச்சுனு 4 தேசிய விருதுகளை தட்டிதூக்கிய பொன்னியின் செல்வன் 1
Gargi Movie Sai Pallavi
அடுத்தபடியாக கன்பார்ம் நேஷனல் அவார்டு ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு படம் கார்கி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு அவ்விருது வழங்கப்பட்டது.
Rs Shivaji
அதேபோல் கார்கி படத்தில் சாய் பல்லவியின் தந்தையாக நடித்த மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜிக்கும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. ஒருபுறம் 6 தேசிய விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் இதுபோன்ற தரமான படங்களுக்கு விருதுகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை தருவதாக நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு 2 விருதுகள்; சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நித்யா மேனன்!