தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியின் டபுள் ஐஸ்மார்ட் படத்திற்காக 20 கிலோ உடல் எடை குறைத்துள்ளார். அதன் ரகசியத்தை அண்மையில் பகிர்ந்த ராம்பொதினேனியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
’iSmart Shankar - ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் தொடர்ச்சியான ‘டபுள் ஐஸ்மார்ட்’ சுதந்திரதினத்தன்று வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட டபுள் மடங்கு ட்ரீட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
டபுள் ஐஸ்மார்ட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ராம் பொதினேனி, படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பின் போதைய சில சுவாரஸ்ய நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார். டபுள் ஸ்மார்ட் படம் தொடங்குவதற்கு முன்பு, தன்னை சந்தித்த இயக்குனர் பூரி ஜெகன்னநாத் இப்படத்திற்காக உடல் எடை குறைக்க வேண்டும் என்றார்.
24
Ram Pothineni!
தனது முந்தைய படமான ஸ்கந்தாவுக்காக கொஞ்சம் உடல் எடை அதிகரித்திருந்தேன். இந்த டபுள் ஐஸ்மார்ட் படத்திற்குகாக இயக்குனர் உடல் எடை குறைக்க வேண்டும் என்றவுடன். அந்த கதாபாத்திற்காக நான் உழைக்க ஆரம்பித்தேன் என்றார்.
டபுள் ஐஸ்மார்ட் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தான் 86 கிலோ எடையுடன் இருந்ததாக ராம் பொதினேனி தெரிவித்தார். அதன்பின்னர், இந்தோனேசியாவின் பாலிக்கு சென்று தீவிர உடல் பயிற்சியில் ஈடுபட்டேன். அதன் மூலம் இயற்கையாகவும் விரைவாகவும் 20 கிலோ எடையை குறைத்ததாக கூறியுள்ளார். “தான் பாலிக்கு சென்றவுடன், தனது தொலைபேசியை அணைத்துவிட்டு, ஒரு மாதத்திற்கு என் உடல் எடை குறைப்புக்காக முறையான உடற்பயிற்சி செய்ததாக தெரிவித்தார்.
34
Ram Pothineni!
"ஐஸ்மார்ட் ஷங்கர்' அனைவராலும் மிகவும் விரும்பப்படும் கதாபாத்திரம், அதனால், தான் மீண்டும் எனது பழைய வடிவத்தை பெற நினைத்தேன், மேலும், பார்வையாளர்கள் அந்த பாத்திரத்தில் இருந்து விலகி இருப்பதை தான் விரும்பவில்லை. முதல் பார்ட்ட ஐஸ்மார் ஷங்கரில் எப்படி என்னை பார்த்தார்களோ, அதேபோன்று டபுள் ஐஸ்மார்ட் படத்திற்காக மாறியுள்ளேன் என்றார்.
இந்த, டபுள் ஐஸ்மார்ட் ரசிகர்கள் அணைவருக்கும் ஒரு "பிரியாணி" விருந்து போல் இருக்கும். ஆக்ஷன் என்டர்டெய்னரில் பார்வையாளர்களை மகிழ்விக்க காமெடி, காதல், ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் ஆகிய அனைத்து அம்சங்களும் உள்ளன என்று ராம் பொதினேனி தெரிவித்தார்.