நடிகை சாயா சிங், 'திருப்பாச்சி' படத்தில் இடம்பெற்ற கும்பிட போன தெய்வம் என்கிற பாடலுக்கும், விக்ரம் நடித்த 'அருள்' படத்தில் இடம்பெற்ற உக்கடத்து பப்படம் பாடலுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார்.
210
Nayanthara
அதேபோல் நடிகை நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 'சிவாஜி' படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பாடலுக்கும், நடிகர் விஜய்யின் 'சிவகாசி' படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கும் கெஸ்ட் ரோலில் நடனம் ஆடியுள்ளார்.
நடிகை பானுப்பிரியா செல்லமே படத்தில் இடம்பெற்ற, 'செக்கச் சிவந்த அழகா' என்கிற பாடலில் தோன்றியுள்ளார். இப்பாடல் தற்போது வரை பல திருமண வீடுகளில் ஒலிக்கப்படும் பாடலாக உள்ளது.
410
kiran Rathode
ஜெமினி படத்தின் மூலம் ஹீரோயினாக பிரபலமாகி, கமல், பிரஷாந்த் போன்ற பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை கிரண்... தளபதி விஜய்யின் 'திருமலை' படத்தில் இடம்பெற்ற வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு கவர்ச்சியால் மிரட்டியவர்.
நடிகை ரம்யா கிருஷ்ணன், சிம்பு நடித்த 'குத்து' படத்தில் இடம்பெற்ற போட்டுத் தாக்கு என்கிற பாடல், விஜயகாந்தின் நரசிம்மா படத்தில் இடம்பெற்ற லாலா நந்தலாலா படத்தில் டான்ஸ் ஆடியுள்ளார்.
610
Jyothika
நடிகை ஜோதிகா 'வாலி' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற 'ஓ சோனா ஓ சோனா' என்கிற பாடலில் கியூட் நடனமாடி ரசிகர்கள் மனதை ரசிகர்களை வசீகரித்துள்ளார்.
நடிகை சிம்ரன் 'பிதாமகன்' இடம் படத்தில் இடம்பெற்ற தக தக தக தகவென ஆடவா என்கிற பாடலுக்கு சிம்ரன் ஆடி இருந்தார். இதை தொடர்ந்து, யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.
810
Kushboo
நடிகை குஷ்பூ வில்லு படத்தில் வில்லு வில்லு என துவங்கும் விஜய்யின் இன்ட்ரோ பாடல் மற்றும் தன்னுடைய கணவரின் அரண்மனை படத்திலும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
நடிகை மீனா, தளபதி விஜய் நடித்த ஷாஜகான் படத்தில்... சரக்கு வச்சிருக்கேன் பாடலுக்கு ஆட்டம் போட்டிருப்பார். இந்த பாடலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மற்ற நடிகர்களின் படங்களை விட விஜய் படத்தில் தான் அதிக நாயகிகள் கேமியா ரோலில் தோன்றி ஆட்டமும் போட்டுள்ளனர்.
1010
அதே போல் புஷ்பா படத்தில் சமந்தா, ஜெயிலர் படத்தில் தமன்னா, போன்ற டாப் ஹீரோயின்ஸ் சிலரும்... ஐட்டம் நாயகிகள் அளவுக்கு இறங்கி, திரைப்படங்களில் டான்ஸ் ஆட துவங்கி விட்டனர். இவர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தில் பாதியை இதுபோல் டான்ஸ் ஆட பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.