தளபதி விஜய், அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள திரைப்படம் 'கோட்'. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை, AGS நிறுவனம் சுமார் 300 முதல் 350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக விஜய்க்கு மட்டுமே சுமார் 200 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
24
Goat Movie Cast
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில், அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்திரியும் நடித்துள்ளனர். மேலும் பிரஷாந்த், அஜ்மல் அமீர், பிரபு தேவா, பிரேம்ஜி அமரன், லைலா, பார்வதி நாயர், போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகுமா என் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் தளபதிரசிகர்கள். ஆனால் ஆடியோ ரிலீசுக்கு முன்னரே அடுத்தடுத்த பாடல்கள் வெளியானதால்... அஜித் படத்தை போல் இந்த படத்திற்கும் ஆடியோ வெளியீட்டை விழா இல்லையா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
44
Goat Censor
இந்நிலையில், சற்று முன்னர் 'GOAT' படத்தின் சென்சார் சான்று குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தளபதி நடித்துள்ள இந்த படத்திற்கு U /A சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.