எம்பிபிஎஸ் படித்து முடித்து... பட்டம் வாங்குவதற்கு முன்பாகவே, நடிப்பில் காலடி எடுத்து வைத்தார் அதிதி ஷங்கர். சிறு வயதில் இருந்தே சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக நடிக்க வந்ததாக கூறினார்.
ஷங்கர் மகளின் அதிரடி ஹீரோயின் என்ட்ரி பலரை ஆச்சர்யப்பட வைத்தது. இவர் நடிக்க துவங்கிய பின்னரே, நடிப்பு, ஆட்டம், பாட்டம் என இவரின் பன்முக திறமையும் வெளிப்பட்டது.
முதல் படம் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட் செய்ய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் படத்தில் சில லட்சங்களே சம்பளமாக வாங்கிய அதிதி இரண்டாவது படத்தில் கோடியில் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக, ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்பி டால் போல் வெள்ளை நிற கவுன் அணிந்து... அழகு தேவதை போல் ஜொலிக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. நேற்றைய தினம் அதிதி தன்னுடைய 26-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்... அப்போது எடுத்துக்கொண்ட போட்டோசை தான் அதிதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.