விஜய் டிவி தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
மேலும் இந்த சீசனில் தற்போது விசித்ரா, மைம் கோபி, சிருஷ்டி டாங்கே, கிரண் மற்றும் சிவாங்கி ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக தேவையான நிலையில், இவர்களில் முதல் ஆளாக... டிக்கெட் டூ பினாலே டாஸ்கை வென்று, நடிகை விசித்ரா முதல் ஃபைனலிஸ்ட்டாக தேவானார்.
இதை தொடர்ந்து, போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு வைல்ட் கார்டு சுற்று நடைபெற உள்ளது. இதற்கான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், இதில்... ஃபாரின் போட்டியாளரான ஆண்ட்ரியன் வெற்றிபெற்று ஃபைனலுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.