விஜய் டிவி தொலைக்காட்சியில், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக்பாஸ்' மற்ற அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் சிம்ம சொப்பனம் என கூறலாம். ஒவ்வொரு வாரமும், டிஆர்பியில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு செம்ம டப் கொடுத்து வருவதால், பல தொலைக்காட்சிகள் பிக்பாஸ் சமயத்தில், தங்களின் டிஆர்பி-யை தக்க வைக்க வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தயாராகிறார்கள்.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், 7-ஆவது சீசன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து துவங்க உள்ளதாகவும், இதில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆடிஷனில் கலந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள தகவலில், கமல் ஹாசன்... பிக்பாஸ் புரோமோ ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து முடித்து விட்டதாகவும், ஆனால் நிகழ்ச்சி துவங்குவதில் தான் சிறு குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாங்கிய சம்பளத்தை விட... கமல்ஹாசன் இந்த முறை அதிக சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால்... கண்டிப்பாக இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் களம் பற்றி கொஞ்சம் அதிகமாகவே கமல் பேசுவார் என தெரிகிறது.