பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். இதன்மூலம் அவர் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இதில் முதன்முறையாக ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதியும், காமெடியனாக யோகிபாபுவும் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
அதன்படி ஜவான் படத்தின் டிஜிட்டல், ஓடிடி, சாட்டிலைட் மற்றும் இசை உரிமை ஆகியவை மட்டும் ரூ.250 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. இதுதவிர இப்படத்தின் திரையரங்க உரிமைகளும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளதாம். பெரும் தொகை கொடுத்து இதன் உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.