Pradeep Ranganathan, Vignesh shivan
அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்த விக்னேஷ் சிவன், அடுத்ததாக லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
janhvi kapoor
இந்நிலையில், அப்படம் குறித்த மற்றுமொரு ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் ஜோடியின் மகளான ஜான்வி கபூர், இப்படம் மூலம் தான் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.