செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் பிரியா பவானி சங்கர். இதையடுத்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்த அவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் மேயாத மான். ரத்னகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா. இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரிசையாக குவியத் தொடங்கின.