இப்படத்திற்காக உடல் எடையை கூட்டி குண்டான தோற்றத்துக்கு மாறிய அனுஷ்கா, பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். யோகா, உடற்பயிற்சி என எது செய்தாலும் அவரது உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதன் காரணமாக அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகளும் குறையத்தொடங்கின. தற்போது அவர் கைவசம் ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டுமே உள்ளது. அதிலும் இளம் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அனுஷ்கா.