அதில் நகைச்சுவை நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் பேசுகையில், “எங்க அண்ணேன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயத்தில் வடிவேலு அவரை பயங்கரமாக திட்டி பேசி இருந்தார். ஒருநாள் நான் விஜய் வீட்டருகே சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கேப்டன் விஜயகாந்த்தின் கார் திடீரென என் மீது மோத வந்தது. அப்போது யார்ரா அதுனு திரும்பி பார்த்தா கேப்டன் கார்ல இருந்தாரு. அவரு டேய் இங்க வாடானு என்னைய கூப்பிட்டார்.
என்ன அண்ணேன்னு கேட்டேன். வடிவேலுவ நடிக்க சொல்றானு சொன்னாரு. ஏன் ஆள வச்சு அடிக்குறதுக்கானு கேட்டேன். அதற்கு அவர், இல்லடா அவன் காமெடி தான்டா நல்லாயிருக்கு. அவன நடிக்க சொல்லுனு சொன்னாரு. இதப்போய் நான் வடிவேலுகிட்ட சொல்லட்டுமானு கேட்டேன். போய் சொல்லுனு சொல்லிட்டு கிளம்பிட்டாரு. உடனே வடிவேலுவிடம் சென்று கேப்டன் சொன்னதை சொன்னேன். அப்படியானு வடிவேலுவே ஆச்சர்யப்பட்டான். அதுமட்டுமின்றி வடிவேலு தன்னைப்பற்றி தரக்குறைவாக பேசினாலும், யாரும் அவரை தரக்குறைவாக பேச வேண்டாம் என பிரச்சார சமயத்தில் வடிவேலு அனைவரிடமும் கேட்டுக்கொண்டதாக சுப்புராஜ் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... வ.கௌதமன் இயக்கி நடிக்கும் "மாவீரா" பட தலைப்பு திடீர் என மாற்றம்!