கோலிவுட் திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. 40 வயதை எட்ட உள்ள போதிலும், இவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் நயன்தாராவோ, தன் மனதிற்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களில் கூட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும், ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளையும் அதிகம் தேர்வு செய்து நடிக்கிறார்.
இவர் 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கினார். இருவரும் 7 வருடங்களுக்கு மேல், உருகி... உருகி... காதலித்து டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு, ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' சென்சார் தகவல் வெளியானது!
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது கோலிவுட், டோலிவுட், மாலிவுட் திரை உலகை தாண்டி... பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். முதல் பாலிவுட் படத்திலேயே நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஜவான்' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம், செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த தகவல் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது நயன்தாராவின் மாமனாரும், விக்னேஷ் சிவனின் தந்தையுமான சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் விக்னேஷ் சிவனின் உறவினர்கள் கொடுத்துள்ள புகார் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த புகார் மனுவில், விக்னேஷ் சிவனின் தந்தை தங்களுக்கே தெரியாமல் தங்களுடைய சொத்துக்களை அபகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.