நல்லா நடிச்சிருக்கனு பாராட்டுனாங்க; ஆனா வாய்ப்பு தரல! 1.5 வருஷம் சும்மா இருந்தேன்- ஆதங்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

Published : Jul 07, 2023, 09:29 AM IST

காக்கா முட்டை படத்திற்கு பின்னர் நிறைய பாராட்டுக்கள் கிடைச்சாலும், அப்போது யாரும் நடிக்க வாய்ப்பு தரவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

PREV
14
நல்லா நடிச்சிருக்கனு பாராட்டுனாங்க; ஆனா வாய்ப்பு தரல! 1.5 வருஷம் சும்மா இருந்தேன்- ஆதங்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்
Aishwarya Rajesh

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அங்கீகாரம் கிடைத்த படம் என்றால் அது காக்கா முட்டை தான். அதற்கு முன்னர் வரை ஹீரோயினாக நடித்து வந்த இவர், காக்கா முட்டை படத்தில் 2 சிறுவர்களின் தாயாக நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு தேசிய விருதையும் வென்று அசத்தியது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

24
Aishwarya Rajesh

அதன்பின்னர் தர்மதுரை, செக்கச் சிவந்த வானம், நம்ம வீட்டு பிள்ளை, சாமி ஸ்கொயர் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். இப்படம் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அதிகம் நடிக்கத் தொடங்கினார் ஐஸ்வர்யா.

இதையும் படியுங்கள்... வேளாண் வர்த்தக திருவிழா..! நடிகர் கார்த்தி பொதுமக்களுக்கு வைத்த கோரிக்கை!

34
Aishwarya Rajesh

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அதிகம் நடிப்பதற்கான காரணத்தை கூறினார். அதில் அவர் பேசியதாவது : “காக்கா முட்டை படத்திற்கு பின்னர் என்னை நிறைய பேர் அழைத்து பாராட்டினார்கள், ஆனால் யாரும் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, துல்கர் போன்ற நடிகர்கள் கூட பாராட்டினார்கள் ஆனால் அவர்களும் வாய்ப்பளிக்கவில்லை.

44
Aishwarya Rajesh

காக்கா முட்டை படத்துக்கு பின் ஒன்றரை வருஷமா சும்மா தான் இருந்தேன். அதனால் தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களை அதிகளவில் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தேன். இங்கே ஹீரோ, ஹீரோயின் இடையே நிறைய பாகுபாடு உள்ளது. இதுவரை 15 பெண்கள் சார்ந்த படங்களில் நடித்துவிட்டேன். இருந்தும் இன்றுவரை எந்த ஒரு பெரிய ஹீரோவும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவர்கள் ஏன் என்னை அழைக்கவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என கவலையில்லை. எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்...  உறவினர்கள் சொத்தை அபகரித்த விக்னேஷ் சிவன் தந்தை! நயன் - விக்கி மீது க்ரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

click me!

Recommended Stories