தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் போனதால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என அடுத்தடுத்து 2 வெப் தொடர்களில் நடித்தார் தமன்னா. இந்த இரண்டு வெப் தொடர்களும் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது.