நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தந்தையைப் போலவே, சினிமாவில் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதிஹாசன், அடுத்தடுத்து விஜய் உடன் புலி, அஜித் ஜோடியாக வேதாளர், தனுஷின் 3, ஆகிய திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
Shruti Haasan
தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் சலார் என்கிற பான் இந்தியா படம் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ருதி. இப்படத்தை கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. செப்டம்பர் 28-ந் தேதி சலார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. தெலுங்கில் உருவாகி இருக்கும் இப்படத்தை தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர்.
shruti haasan
சலார் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், உங்கள் தந்தை உங்களை எப்படி அழைப்பார் என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஸ்ருதி, சடகோபா என்று தான் அழைப்பார் என கூறி இருந்தார். அவர் எதற்காக அப்படி அழைக்கிறார் என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், ஸ்ருதிஹாசன்கிற பெயரே நல்லா தான இருக்கு, பிறகு ஏன் சடகோபா என ஆண் பெயர் சொல்லி கமல் அழைக்கிறார் என்பது தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... வடிவேலு காமெடி தான்டா நல்லாருக்கு... அவன நடிக்க சொல்லுடா! பிரபலம் மூலம் வைகைபுயலுக்கு தூது அனுப்பிய விஜயகாந்த்