சூர்யா படத்தை நாரடிப்போம்; உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்துடும்? நடிகரின் பேச்சால் பரபரப்பு!

First Published | Nov 23, 2024, 9:57 AM IST

நடிகர் சூர்யாவின் படத்தை தொடர்ந்து நாரடிப்போம் என்று, பிரபல சீரியல் நடிகர் ரவி அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில் பொங்கி எழுந்துள்ளார். இவரது பேச்சு தற்போது பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
 

Suriya Kanguva Movie

நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14ஆம் தேதி, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'கங்குவா' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால், 'கங்குவா' தற்போது பல திரையரங்குகளில் காத்து வாங்கி கொண்டிருக்கிறது.

Kanguva Scene Trimmed

ஒரே வாரத்தில் பல தீயேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட கங்குவாவை, எப்படியும் கரை சேர்த்து விட வேண்டும் என பட குழு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அதன் படி ரிலீஸ் ஆன பின்னர் இப்படத்தின் முன் பகுதியில் இடம்பெற்ற சில காட்சிகள் லென்த்தியாக இருப்பதாக ரசிகர்கள் சொன்ன பகுதியில் 12 நிமிடத்தை தூக்கி விட்டனர். அதே போல் இரைச்சல் அதிகமாக உள்ளது என கூறப்பட்ட இடங்களிலும், மீண்டும் பட்டி டிங்கரிங் செய்யப்பட்டுள்ளது.

ஐயப்ப பத்தர்கள் உணர்வை சீண்டிய பிக்பாஸ் பிரபலம் இசைவாணியின் கானா பாடல்!
 

Tap to resize

Kanguva Got Negative Reviews

ஆனால் படத்துக்கு முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து விட்டதால், இந்த படத்தை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது சாத்தியம் அற்றதாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், பல இயக்குனர்கள், நடிகர்கள் இப்படம் குறித்து தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை கூறி கங்குவா பபடத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Suseendran Statement

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இயக்குனர் சுசீந்திரன், 'கங்குவா' திரைப்படம் அனைவரும் கொண்டாட கூடிய திரைப்படம். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இந்த திரைப்படம் கொண்டு சென்றுள்ளது. சூர்யாவின் நடிப்பு அபாரம். எனவே காலம் தாழ்த்தி இந்த படத்தை கொண்டாடாதீர்கள்... என்கிற கோரிக்கையோடு 'கங்குவா' படத்தை ரசிகர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

விஜய் டிவி 'மகாநதி' சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம்; யாருக்கு அதிகம் தெரியுமா?

Jyothika About Kanguva

சூர்யாவின் மனைவி ஜோதிகாவும், கணவருக்காக வரிந்து கட்டி கொண்டு வந்து 'கங்குவா' படம் பற்றி விமர்சனம் கூறி இருந்தார். ஜோதிகாவின் இந்த விமர்சனத்திற்கு சிலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தால், சுசித்ரா போன்ற சில பிரபலங்கள்... கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். அந்த வகையில் தற்போது சீரியல் நடிகர் ரவியும் தன்னுடைய பங்குக்கு சூர்யா - ஜோதிகாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Ravi Chandran Controversy Speech

இது குறித்து அண்மையில் அவர் பேசும்போது, சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம். தமிழ்நாட்டில் பிறந்து, வாழ்ந்த சூர்யா இங்கு தரமான கல்வி கிடைக்காது என்று, தன்னுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க மும்பைக்கு போனதாக சூர்யாவும் - ஜோதிகாவும் சொல்றாங்க. உங்க பிள்ளைகள் மட்டும் தரமான பள்ளிக்கூடத்தில் படிக்கணும். ஆனால், இங்கு இருக்கிற மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஒரு மொழியை கத்துக்கிட்டா... உன் புருஷனுக்கு பொத்துட்டு வந்துடும் என ஜோதிகாவிடம் கேள்வி எழுப்புவது போல் பேசி உள்ளார். அதாவது சூர்யா ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததை இதில் சுட்டிக்காட்டி உள்ள சீரியல் நடிகர் ரவி, நாங்களும் பண்ணுவோம்.. நாங்களும் செய்வோம்... தொடர்ந்து செய்வோம்... சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம், உன்னால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போ... சவால் சவால் விடுவது போல் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யா - சோபிதா விருப்பம் போல் நடக்கும் திருமணத்தில் என்ன ஸ்பெஷல்? நாகர்ஜுனா பகிர்ந்த தகவல்!

Latest Videos

click me!