
Devayani Net Worth, Farm House, Car Collection : மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த நடிகை தேவயானியை தமிழ் சினிமா அரவணைத்து தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டது. பெங்காலி படத்தின் மூலமாக சினிமாவுக்கு வந்த தேவயானி தமிழில் நடித்த முதல் படம் தொட்டாசிணுங்கி. அதன் பிறகு அஜித் மற்றும் பிரசாந்த் உடன் இணைந்து கல்லூரி வாசல் படத்தில் நடித்தார்.
இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் தேவா இசையமைப்பில் திரைக்கு வந்த காதல் கோட்டை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். கண்டதும் காதல் வரும். ஆனால், இந்தப் படத்தில் இருவருமே ஒருவரையொருவர் பார்த்தது கூட கிடையாது. அப்படியிருந்தும் ஒருவருக்கொருவர் காதலிப்பார்கள். கடைசியில் அவர்களது உண்மையான காதல் கைகூடியதா இல்லையா என்பது தான் கதை. கிளைமேக்ஸ் செம்ம சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்தப் படத்தில் கமலியாகவே வாழ்ந்து காட்டி இளசுகளின் இதயங்களை கொள்ளை கொண்டிருப்பார். இந்த படத்தில் சிறந்த நடிகையாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்திய தேவயானிக்கு தமிழ்நாடு மாநில விருது கிடைத்தது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்தார். காதல் கோட்டை கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றிக்கு பிறகு தான் சரத்குமாரின் சூர்யவம்சம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பெற்றோரையும் மீறி சரத்குமாரை காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு படித்து ஐஏஎஸ் கலெக்டராக வந்து கணவருக்கு பெருமை சேர்க்கும் ஒரு கதாபாத்திரம். சரத்குமாரும் தன்னுடைய கடின உழைப்பை மட்டுமே நம்பி முன்னுக்கு வந்திருப்பார். இவர்கள் இருவருமே ஒரே நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது என்ற பாட்டுல முன்னுக்கு வந்திருப்பார்கள். படத்திற்கு பாடல்களும் பலம் சேர்த்திருக்கும்.
சூர்யவம்சம் படத்திற்கு பிறகு மறுமலர்ச்சி, நீ வருவாய் என, வல்லரசு, தெனாலி, ஃபரண்ட்ஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், சுந்தர புருஷன், அழகி, தென்காசி பட்டணம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடித்த விஜய், அஜித், விக்ரம், கமல் ஹாசன், மம்மூட்டி எல்லோருமே மாஸ் ஹீரோவாக இப்பவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சத்யராஜ், பிரபு, பார்த்திபன், லிவிங்ஸ்டன், சரத்குமார் ஆகியோரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜெனி என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் ராஜகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு அஜித் குமார் நடிப்பில் வந்த நீ வருவாய் என என்ற படமும் ஒரு காரணம். படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அதில் முக்கியமான ஒரு நாடகம் எது என்றால் அது கோலங்கள். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளை கோலங்கள் நாடகத்தின் மூலமாக மக்களை ரசிக்க வைத்தார்.
ரம்யா கிருஷ்ணன், மீனா, ஜோதிகா, ரம்பாவுக்கு டப் கொடுத்த தேவயானி இப்போது ரூ.15 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறாராம். சென்னையில் சொந்தமாக வீடும் இருக்கிறதாம். இது தவிர சொந்த ஊரான ஈரோட்டில் உள்ள அந்தியூரில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. பென்ஸ், ஸ்கோடா உள்ளிட்ட கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறாராம். இப்படியொரு ராஜவாழ்க்கை வாழும் நடிகைகளில் தேவயானியும் ஒருவராக திகழ்கிறார். இவருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்று இரு மகள்கள் இருக்கின்றனர்.
இரண்டு ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டைச் சுற்றிலும் கொய்யா மரங்கள், சந்தன மரங்கள், தென்னை மரங்கள், பீட்ரூட் என்று பழங்களும், காய்கறிகளும், பூக்களும் பூத்துக் குலுங்கும் ஒரு சொகுசான பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் மிகப்பெரிய அளவில் 5 பெட்ரூம்களும் இருக்கிறதாம். வீட்டில் நினைத்த நேரத்திற்கு மழை பெய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாம். வெயில் காலத்திலும் குளிராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பண்ணை வீட்டில் இப்படியொரு வசதி செய்யப்பட்டுள்ளதாம்.